டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் நிலையில், அதனை எப்படி சர்வீஸ் செய்வது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

Ola Electric நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Ola S1 கடந்த சுதந்திர தினத்தன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. S1 மற்றும் S1 Pro என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

அதற்கு காரணம் Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள வசதிகள் மற்றும் அதன் விலை ஆகியவைதான். Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான வகையில் நடைபெறவுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

அப்படியானால், அது என்ன வழக்கத்திற்கு மாறான முறை? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் டீலர்ஷிப்களை அமைத்து, அதன் மூலமாகவே தங்களது எலெக்ட்ரிக் வாகனங்களை டெலிவரி செய்யும். ஆனால் Ola Electric நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யவுள்ளது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

ஆம், Ola Electric நிறுவனத்திற்கு டீலர்ஷிப்கள் இருக்காது. அதற்கு பதிலாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடியாக வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும். அப்படியானால் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் என்ன செய்வது? அதனை எப்படி சர்வீஸ் செய்வது? போன்ற சந்தேகங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

ஆனால் Ola Electric நிறுவனம் அதற்கும் திட்டங்களை வைத்துள்ளது. Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்ய வேண்டுமானால் என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பதை Ola Electric நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான அதிகாரப்பூர்வ செயலி மூலம் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவை செய்ய முடியும்.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

இதன்பின் Ola Electric நிறுவனம் சர்வீஸ் செய்வதற்கான நபரை நியமிக்கும். இவர் Ola Champion என அழைக்கப்படுவார். அத்துடன் அவர் எப்போது வருவார்? என்ற நேரமும் மதிப்பிடப்படும். இதன்பின் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனரால், வாடிக்கையாளரின் வீட்டிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சர்வீஸ் செய்யப்படும்.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்வது? என்ற குழப்பம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு நீங்கியிருக்கும் என நம்புகிறோம். இதுதவிர அடுத்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சென்டரையாவது (Experience Centre) அமைக்க வேண்டும் என Ola Electric நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

Ola S1 வேரியண்ட்டின் விலை 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் Ola S1 Pro வேரியண்ட்டின் விலை 1,29,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்திற்கு மாநிலம் விலை வேறுபடும். இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வரும் மானியமே காரணம் ஆகும்.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

இதன்படி டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவான விலையில் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இருப்பினும் இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் மிகவும் குறைவான விலையில் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

அங்கு Ola S1 வேரியண்ட்டின் விலை வெறும் 79,999 ரூபாய் மட்டும்தான். அதே சமயம் குஜராத் மாநிலத்தில் Ola S1 Pro வேரியண்ட்டின் விலை வெறும் 1,09,999 ரூபாய் மட்டுமே. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாநில அரசுகள் வழங்கி வரும் மானியம் காரணமாக, மாநிலத்திற்கு மாநிலம் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மாறுபடுகிறது.

டீலர்கள் கிடையாது... வீட்டிற்கே டெலிவரி! அப்டினா Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி சர்வீஸ் செய்யணும் தெரியுமா?

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இன்னமும் விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களும் தற்போது ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Most Read Articles
English summary
Ola s1 electric scooter service details
Story first published: Tuesday, August 24, 2021, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X