ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்னால் இந்த வீடியோவை கண்டிப்பா பார்த்திடுங்க!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரில் வைத்து நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். அப்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எங்களை வெகுவாக கவர்ந்தது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரிவியூ-வை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். இதில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், டாப் ஸ்பீடு, பேட்டரி, சார்ஜிங் மற்றும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அத்துடன் ஓட்டுதல் அனுபவம் மற்றும் செயல்திறன் எப்படி உள்ளது? என்பதையும் கூறியுள்ளோம்.
ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிறிது நேரம் டெஸ்ட் ரைடு செய்யும் வாய்ப்பு மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. எனினும் கூடிய விரைவில் அதனை முறையாக சோதனைக்கு உட்படுத்துவோம். அப்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்கிறோம். அதுவரை டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








