ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ்1 வேரியண்ட்டிற்கும் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த சுதந்திர தின நாளில் அதிகாரப்பூர்வமாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த இ-ஸ்கூட்டரின் விலைகள் ரூ.99,999 (எஸ்1) மற்றும் ரூ.1.29 லட்சம் (எஸ்1 பிரோ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?
Prices S1 S1 Pro
Gujarat ₹79,999 ₹1.09 lakh
Delhi ₹85,099 ₹1.10 lakh
Rajasthan ₹89,968 ₹1.19 lakh
Maharashtra ₹94,999 ₹1.24 lakh
Other Cities ₹99,999 ₹1.29 lakh

விலையை பொறுத்தவரையில் இரண்டிற்கும் இடையே ரூ.30,000 வித்தியாசம் உள்ளது. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டாரே பெல்ட்-ட்ரைவ் இறுதி டிரைவ் இயந்திரநுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பேட்டரி மூலமாக கிடைக்கும் ரேஞ்ச் அளவில் இரண்டும் வேறுபடுகின்றன.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?
Specifications S1 S1 Pro
Battery 2.98KWh 3.97KWh
Electric Motor Output 5.5KW 5.5KW
Peak Power 8.5KW 8.5KW
Fast Charging Time 75km in 18 minutes 75km in 18 minutes
Normal Charging Time (0 to 100%) 4 hr 48 min 6 hr 30 min
Range (ARAI) 121km 181km

அதாவது ஓலா எஸ்1 வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு 121கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியது என்றும், எஸ்1 பிரோ வேரியண்ட்டின் ரேஞ்ச் 181கிமீ என்றும் ஏ.ஆர்.ஏ.ஐ சோதனையில் சான்றளிக்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

பேட்டரி தொகுப்பு வித்தியாசப்படுவதால், அவற்றை சார்ஜ் ஏற்ற தேவைப்படும் நேரமும் வேரியண்ட்டை பொறுத்து மாறுப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த திறன் கொண்ட பேட்டரியுடன் வழங்கப்படும் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய எஸ்1 பிரோ-வை காட்டிலும் குறைவான நேரமே தேவைப்படும்.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

இவை இரண்டிலும் பேட்டரி நிர்வாக அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் ஆயுள், செயல்திறன், வரம்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க உதவும். பெரிய அளவிலான பேட்டரியால் எஸ்1 பிரோ வேகமான வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?
Performance S1 S1 Pro
Acceleration (0 to 40kmph) 3.6 seconds 3 seconds
Acceleration (0 to 60kmph) 7 seconds 5 seconds
Top speed 90kmph 115kmph
Ride modes Normal & Sports Normal, Sports & Hyper

இந்த வேரியண்ட்டில் 0-வில் இருந்து 40kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 3 வினாடிகளில் எட்டிவிடலாம். ஆனால் எஸ்1 வேரியண்ட்டில் 3.6 வினாடிகள் தேவைப்படும். எஸ்1 பிரோவின் அதிகப்பட்ச வேகம் 115kmph ஆகும். ஆனால் எஸ்1 -இன் டாப் ஸ்பீடு மணிக்கு 90கிமீ மட்டுமே ஆகும்.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

இருப்பினும் தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் உள்ள இ-ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் ஓலா எஸ்1 வேரியண்ட் எவ்வளவோ பரவாயில்லை. மற்றப்படி பரிணாம அளவுகளில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை கீழுள்ள அட்டவணையின் மூலம் தெளிவாக காணலாம்.

Dimensions S1 S1 Pro
Length 1859mm 1859mm
Width 712mm 712mm
Height 1160mm 1160mm
Wheelbase 1359mm 1359mm
Seat Height 792mm 792mm
Seat Length 738mm 738mm
Ground Clearance 165mm 165mm
Kerb Weight 121kg 125kg
Boot Space 36 litres 36 litres
ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

இந்த இரு வேரியண்ட்டிலும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 1,859மிமீ ஆகும். வீல்பேஸ் அளவு 1359மிமீ. தரையில் இருந்து இருக்கையின் உயரம் 792மிமீ ஆகும். ஆனால் எடையில் எஸ்1 பிரோ அளவில் பெரிய பேட்டரியினால் எஸ்1 வேரியண்ட்டை காட்டிலும் 4 கிலோ எடை கூடுதலாக உள்ளது.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 கிலோ எடையிலான பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் எஸ்1 பிரோவில் பேட்டரியின் எடை இதனை காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது. இவை இரண்டிலும் இருக்கைக்கு அடியில் இரு முழு ஹெல்மெட்களை அடைக்கும் அளவிற்கு சேமிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?
Features S1 S1 Pro
Instrument cluster 7-inch TFT 7-inch TFT
Proximity keyless entry Present Present
Remote boot Present Present
Calls, SMS & phonebook Present Present
Side-stand alert Present Present
Geo-fencing Present Present
4G, Wifi, Bluetooth Present Present
Onboard navigation Present Present
Limp home mode Present Present
Reverse mode Present Present
Hill hold Not Present Present
Cruise control Not Present Present
Voice assistant Not Present Present
HMI moods with sounds Present Present

தொழிற்நுட்ப அம்சங்களில் எஸ்1 பிரோ பெறும் பெரும்பான்மையானவற்றை எஸ்1 வேரியண்ட்டும் ஏற்று வந்துள்ளது. கூடுதல் விலையினால் எஸ்1 பிரோ வேரியண்ட் வாய்ஸ் உதவி, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை கூடுதலாக பெற்றுள்ளது.

ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலிவான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்?

ஓலா எஸ்1 ஸ்கூட்டர் ஆனது சில்வர், வானின் நீலம், சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் என்ற ஐந்து விதமான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் எஸ்1 பிரோ, இந்த 5 நிறங்களுடன் கூடுதல் 5 நிறங்கள் என சேர்த்து மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola S1 Vs S1 Pro Comparison
Story first published: Tuesday, August 17, 2021, 2:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X