மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

மேலும் பல்வேறு நகரங்களில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை தொடர்ந்து இன்னும் பல்வேறு நகரங்களில் டெலிவரி பணிகளை தொடங்குவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களிலும் அடுத்த வாரம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார். ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து சுமார் 4 மாத இடைவெளிக்கு பின்னர் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் கடந்த டிசம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டன.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

முதற்கட்டமாக பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டிற்கு ஓட்டி சென்ற முதல் 100 வாடிக்கையாளர்களுக்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியது.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் ஆகவும், எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.30 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

அத்துடன் இவை இரண்டுமே மாநில அரசுகள் வழங்கும் மானியங்களுக்கு முன்பான விலையாகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் மானியங்களை வழங்கி வருகின்றன. மாநில அரசுகள் மானியங்களை பொறுத்து இந்த விலை மாறுபடும்.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

அதாவது ஒரு சில மாநிலங்களில் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையை விட மிகவும் குறைவான விலையில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கும். ஒரு சில மாநிலங்களில் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அதே விலையில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

மாநில அரசுகள் வழங்கும் மானிய தொகையை பொறுத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விலைகளில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 121 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

அதே நேரத்தில் விலை உயர்ந்த ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 180 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மொத்தம் மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன், ஆப் கண்ட்ரோல், ஸ்பீக்கர்கள், செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி பாயிண்ட், இருக்கைக்கு அடியில் தாராளமான இடவசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதுபோன்ற காரணங்களால் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் பல்வேறு ஊர்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தொடங்குகிறது... எங்கெங்கு தெரியுமா?

இந்திய சந்தையில் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியிட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே வருவதால், வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

Most Read Articles

English summary
Ola to start s1 and s1 pro electric scooter deliveries in new cities check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X