மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

ஒமேகா சீகி மொபைலிட்டி நிறுவனம் அதன் முதல் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது. வருகிற பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இ-ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

OSM எனப்படும் ஒமேகா சீகி மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதன் முதல் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜோரோ மற்றும் பியாரே என்கிற பெயர்களில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கவுள்ளன. அதனை தொடர்ந்து பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

புனேவில் உள்ள ஒ.எஸ்.எம் நிறுவனத்தின் புதிய ஷோரூமில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இவை இரண்டும் அதிகப்பட்சமாக மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடியவை. ஒரு முறை முழுவதும் சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 85கிமீ தூரம் வரையில் பயணிக்கலாம்.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

மொத்தம் ஏழு விதமான நிறங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஜோரா மற்றும் பியாரே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டின்போது பேசிய ஒமேகா சீகி மொபைலிட்டி நிறுவனர் உதய் நாரங், எங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரத்யேகமான அப்ளிகேஷன்களையும், வசதிகளையும் வழங்கியுள்ளோம்.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

குறிப்பாக உணவு விநியோகம், மருந்துத் துறை மற்றும் பிற துறைகளில் பிரபலமானவைகளாக விளங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி சேர்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது முதல் முதன்மையான கடையினை புனேவில் திறந்துள்ளோம்.

ஒமேகா சீகி மொபைலிட்டி நிறுவனம் தற்சமயம் 15 ஷோரூம்களை இந்தியாவில் கொண்டுள்ளது. இதனை நடப்பு 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் 115ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் 10 முதன்மை ஷோரூம்கள் அடங்குகின்றன என கூறினார்.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

கடந்த ஜூன் மாதத்தில் கனரக தொழில்துறை, ஃபேம் 2 திட்டத்தை திருத்தியமைத்தது. இதன்படி அனைத்து வகையான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் உதவித்தொகை கிலோவாட் மணிநேரத்திற்கு ரூ.10,000-இல் 50% அதிகரிக்கப்பட்டு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மற்ற எரிபொருள் வாகனங்களின் மூலம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை பெறப்படுவது வழக்கம். அது முன்பு அவற்றின் விலையில் 20 சதவீதம் பெறப்பட்டு வந்தது. அது தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

ஒமேகா சீகி மொபைலிட்டி நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் தற்சமயம் வேகமாக விரிவடைந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்டாக உருவெடுத்து வருகிறது. ஒமேகாவின் இந்த விரிவாக்கத்திற்கு புனேவில் திறக்கப்பட்டுள்ள முதல் முதன்மை ஷோரூம் தான் சாட்சி.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

தற்சமயம் நாட்டில் உள்ள 15 ஒமேகா சீகி ஷோரூம்கள் அனைத்திலும் எலக்ட்ரிக் வாகனத்தின் தோற்றத்தையும், சிறப்பம்சங்களையும் காண டேப்லெட் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் ஒமேகா சீகி நிறுவனம் விற்பனை செய்கிறது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

ஒமேகா சீகி பிராண்டில் இருந்து எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் ரேஞ்+ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளன. அதில் ரேஞ்+ ஃப்ரோஸ்ட் (உறைபனி) என்ற மாடல் இந்தியாவின் முதல் ஏசி வசதி கொண்ட எலக்ட்ரிக் மூன்று சக்கர-வாகனமாக விளங்குகிறது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் புதியதாக தொழிற்சாலை ஒன்றை ஒமேகா சீகி மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிறுவி வருகிறது. இளைஞர் கிராமிய தொழில்முனைவோர் அறக்கட்டளை உடன் இணைந்து ஒமேகா சீகி நிறுவனம் உருவாக்கி வரும் இந்த தொழிற்சாலை ரூ.100 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலையின் மூலம் உத்திர பிரதேச மாநிலம் காஸியாபுர் பகுதியில் அடுத்த இரு வருடங்களில் 10,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர் கிராமிய தொழில்முனைவோர் அறக்கட்டளை மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய, ஒமேகா சீகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

இந்த அறக்கட்டளை கடந்த பல ஆண்டுகளாக பல அரசு/ அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்புற இளைஞர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பணியாற்ற போதுமான தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Omega seiki introduced there first electric scooters will launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X