பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒன்-மோட்டோ (One-Moto) என்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியாவில் எலக்டா (Electa) என்கிற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிரிட்டிஷ் நாட்டின் இ-ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

ஒன்-மோட்டோ நிறுவனம் இந்திய சாலைகளில் அதன் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்துவதில் மிகவும் முனைப்புடன் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது எலக்டா என்கிற பெயரில் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

சற்று பிரீமியம் தர எலக்ட்ரிக் ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்பட்டுள்ள எலக்டா -வின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 2 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்-மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் மூன்றாவது தயாரிப்பு வாகனம் இதுவாகும். முன்னதாக கடந்த 2021 நவம்பர் மாதத்தில் கம்முடா மற்றும் பைகா என்கிற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

இந்த மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஒன் செயலி வசதியினை கொண்டுள்ளன. இதன் மூலமாக ஜியோ-ஃபென்சிங், தொழிற்நுட்பங்களின் தகவல்கள் மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட செயல்பாடுகளை பெற முடியும். தற்போதைய அறிமுகமான எலக்டாவில் 72 வோல்ட் மற்றும் நீக்கக்கூடிய 45 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

இந்த பேட்டரியினை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப அதிகப்பட்சமாக 4 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. முழு பேட்டரி சார்ஜில் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு இந்த இ-ஸ்கூட்டரில் செல்லலாமாம். 4 கிலோவாட்ஸ் QS பிரஷ்லெஸ் நேர்திசை மின்னோட்ட எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியினால் எலக்டா டாப் ஸ்பீடை 100kmph என்ற அளவில் பெற்றுள்ளது.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

அனலாக் திரையினை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் கொண்டுள்ள எலக்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் தோற்றம் வசீகரிப்பதாக இல்லை என தோன்றினால், கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ள க்ரோம் தொடுதல்களை பெறலாம். ஆனால் இதற்கு கூடுதல் தொகையினை செலவிட வேண்டியதாக இருக்கும்.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

எலக்டாவின் எலக்ட்ரிக் மோட்டார், கண்ட்ரோலர் மற்றும் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தை ஒன்-மோட்டோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை வேகமாக விரிவடைந்து வருவதை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாளுக்கு நாள் சாலைகளில் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தீவிரமாக உள்ள ஒன்-மோட்டோ நிறுவனத்தின் இந்திய நாட்டிற்கான சிஇஒ சுபாங்கர் சௌத்ரி புதிய எலக்டா இ-ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "இந்தியா இவி மாற்றத்தை வரவேற்கிறது. மேலும் அதை ஊக்குவிப்பதற்காக தரமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துக்கிறோம்.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

அதிவேக, தரமான பிரீமியம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதும், அவற்றை இந்திய மெட்ரோ நகரங்களுக்கு விநியோகம் செய்வதும் தான் தற்போதைக்கு எங்களது குறிக்கோளாக உள்ளது. எரிபொருள் என்ஜின் வாகனங்களை இயக்கும்போது அவர்கள் பெறும் முழுமையான அனுபவத்தை எலக்ட்ரிக் தயாரிப்புகளின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம்" என்றார்.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

புதிய எலக்டா இ-ஸ்கூட்டரானது ஒன்-மோட்டோ நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் விலைமிக்க மாடலாக விளங்குகிறது. ஏனெனில் பைகா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.80 லட்சமாக இருக்க, கம்முடா ரூ.1.30 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவிரிகள் 2020 பிப்ரவரியில் துவங்கும் என தெரிகிறது.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

ஒன்-மோட்டோ நிறுவனம் எலக்டா இ-ஸ்கூட்டரின் தோற்றத்தினை ஒரே வரியில், ‘மாடர்ன் கிளாசிக்' என அழைக்கிறது. ஏனெனில் பழமையான ஸ்கூட்டரின் தோற்றத்தினை ஆங்காங்கே சில மாடர்ன் தொடுதல்கள் எலக்டா கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் பெங்களூரில் நடைபெற்ற பசுமை வாகன எக்ஸ்போவில் மூலம் முதல்முறையாக இந்தியாவில் இந்த பிரிட்டிஷ் இவி பிராண்ட் களம் புகுந்தது.

பழமை மாறாத தோற்றத்தில் எலக்டா அதிவேக இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!! விலையை கேட்டா மயக்கமே வருது!

எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஒன்-மோட்டோவின் மாடல்களுக்கு உண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் ஒன்-மோட்டோவின் காட்சி பகுதிக்கு, நிறுத்த வைக்கப்பட்டிருந்த ஒன்-மோட்டோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்வையிடுவதற்காகவும், அவற்றை பற்றிய விபரங்களை அறிவதற்காகவும் வருகை தந்திருந்தனர்.

Most Read Articles

English summary
British brand One-Moto launches high speed electric scooter Electa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X