பேயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்! இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ.. தைரியமானவர்களுக்கு மட்டும்!

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தானாக நகர்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

ஆள்வரமற்ற சாலையில், ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் (பைக்) ஒன்று திடீரென தானாக நகர்ந்து சென்று கீழே விழுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குஜராத் மாநிலத்தில் அரங்கேறியதாகக் கூறப்படும் இந்த வீடியோவை ஆம்பர் ஜெய்டி எனும் இளைஞர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

இவரின் மூலமே இவ்வீடியோ வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. மேலும், இணைய வாசிகள் மத்தியில் தற்போது வைரலாகியும் வருகின்றது. இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இவ்வீடியோவை பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களில் பலர், பைக் தானாக நகர்ந்து சென்று விழுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

குறிப்பாக, பேய்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களைக் கூட இந்த வீடியோ அமானுஷ்யத்தை நம்ப வைக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. பொதுவாக, சாய்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் இதுபோன்று நழுவி சென்று விழவது வாழக்கமான ஒன்று. ஆனால், பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தெரு சமதளமான தரையமைப்பைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

இத்தகைய பகுதியில் சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கே பொறுமையாக நழுவி சென்று கவிழ்கின்றது. மேலும், சம்பவம் நடைபெற்ற போது அந்த தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. காரணம், சம்பவம் நடைபெற்றது அதிகாலை 4 மணி என கூறப்படுகின்றது. வீடியோவில் இடம்பெற்றிருக்கும் நேரமும் அதனையேக் குறிப்பிடுகின்றது.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

இந்த நேரத்திலேயே பைக் தானாக நகர்ந்து சென்று, கீழே சரிந்திருக்கின்றது. அப்போது, பைக் சைடு லாக் போட்டிருந்த காரணத்தினால் அந்த வாகனம் நேராக செல்லாமல், வளைந்தவாறு சென்று கவிழ்வதையும் நம்மால் காண முடிகின்றது. அதேசமயம், இருசக்கர வாகனத்தை யாரோ இழுத்து செல்வது போல் சற்று வேகமாக நகர்வதையும் நம்மால் காண முடிகின்றது.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

இந்த ஒட்டுமொத்த காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் படமாகியிருந்தன. இந்த வீடியோவே தற்போது ஆம்பர் ஜெய்டி என்பவரின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இவர், "இந்த காட்சிகள் கேமிராவில் பதிவாகாமல் இருந்திருந்தால், இச்சம்பவத்தை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்" என்று கூறி அமானுஷ்ய வீடியோவை பதிவிட்டிருக்கின்றார்.

போயோட வேலையா இருக்குமோ! தானாக நகரும் பைக்... இணையத்தில் வைரலாகும் விசித்திர வீடியோ... தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்!

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பலர் இது அமானுஷ்ய சக்தியின் வேலையாகதான் இருக்கும் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சிலர் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடவும் ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும், வாகனம் நகர்ந்து சென்றதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.

வெறும் 30 விநாடிகள் மட்டுமே அடங்கியுள்ள இந்த காட்சியை தற்போது வரை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பார்த்தவர்கள் அனைவரின் மத்தியிலும் இந்த காட்சி இனம் புரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறலாம். குறிப்பாக, இந்த காட்சிகள் குறித்து இணைய வாசிகள் பலர் பல்வேறு விதமான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Parked Bike Moving By Itself Is Going Viral On Twitter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X