இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பஜாஜ் பிளாட்டினா பைக்கை அனைவரும் வாங்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வரும் மிக பிரபலமான பைக்குகளில் ஒன்றாக பிளாட்டினா (Bajaj Platina) திகழ்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் விலை குறைவான பைக்குகளில் ஒன்று என்ற பெருமையும் பிளாட்டினாவிற்கு உள்ளது. இந்தியாவில் தற்போது பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 82,559 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 55,496 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 49 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பஜாஜ் பிளாட்டினா பதிவு செய்து அசத்தியுள்ளது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு பெட்ரோல் விலை உயர்வுதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் 100 சிசி இன்ஜின் மிக சிறப்பான மைலேஜை வழங்க கூடியது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

அத்துடன் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்த பைக்கின் விலையும் குறைவு. எனவே பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையை சமாளிப்பதற்கு பஜாஜ் பிளாட்டினா பைக் மிக சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக்கில், 100 சிசி, 4-ஸ்ட்ரோக், டிடிஎஸ்-ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 7.9 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 8.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என 2 வேரியண்ட்களில் பஜாஜ் பிளாட்டினா பைக் கிடைக்கிறது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இதில், கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 52,915 ரூபாய் ஆகவும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 58,042 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர பஜாஜ் பிளாட்டினா 110 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் (Bajaj Platina 110 ES) மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இதில், 115 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.6 பிஎஸ் பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. தற்போதைய நிலையில் பஜாஜ் பிளாட்டினா 110 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பைக்கின் ட்ரம் பிரேக் வேரியண்ட்டின் விலை 62,598 ரூபாய் ஆகவும், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலை 67,904 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்போர்ட், டிவிஎஸ் ரேடியான் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் உள்ளிட்ட பைக்குகளுடன் பஜாஜ் பிளாட்டினா போட்டியிட்டு வருகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் 100 சிசி மாடல் ஒரு லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

அதே நேரத்தில் 115 சிசி மாடல் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதை விட அதிக மைலேஜ் கிடைப்பதாகவும் கூட பஜாஜ் பிளாட்டினா பைக்கின் ஒரு சில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு குறைவான விலையில் இந்த அளவிற்கு மைலேஜ் வழங்குவதுதான் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து பலர் பரிசீலனை செய்து வருகின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதுடன், சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை போன்ற ஒரு சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன.

இப்ப எல்லாருமே Bajaj Platina பைக்கைதான் வாங்கறாங்க! விலை, மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணீருவீங்க!

எனவே பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பஜாஜ் பிளாட்டினா பைக் சிறந்த தேர்வாக இருக்கும். நடப்பு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தீபாவளிக்கு பைக் வாங்கவுள்ள பலரின் தேர்வாக பஜாஜ் பிளாட்டினாவே உள்ளது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Petrol price hike bajaj platina sales increased by 49 per cent in september 2021
Story first published: Monday, November 1, 2021, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X