பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்று விதமான மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பியாஜியோ ஒன், பியாஜியோ ஒன் பிளஸ் மற்றும் பியாஜியோ ஒன் ஆக்டிவ் என்ற பெயர்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

பியாஜியோ ஒன்

இந்த மாடலில் 1.8kWh திறன் கொண்ட பேட்டரித் தொகுப்பும், 1.2kW மின் மோட்டாரும் இணைக்கப்பட்டு இருக்கும். இதில், பியாஜியோ ஒன் ஸ்கூட்டர் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 55 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 45 கிமீ வேகம் வரை செல்லும்.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

பியாஜியோ ஒன் ப்ளஸ்

பியாஜியோ ஒன் ப்ளஸ் மாடலில் 2.3kWh பேட்டரியும், 1.2kW மின் மோட்டாரும் இருக்கும். இந்த மாடலானது மணிக்கு 55 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

பியாஜியோ ஒன் ஆக்டிவ்

இந்த மாடலில் கூடுதல் திறன் வாய்ந்த 2kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ஸ்கூட்டர மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும் திறனை வழங்கும். அத்துடன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

முக்கிய அம்சங்கள்

புதிய பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி, எல்இடி லைட்டுகள், யுஎஸ்பி சார்ஜர், இரண்டு ரைடிங் மோடுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும்.

 பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியீடு

ஐரோப்பாவில் அறிமுகமாகிறது

முதல்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியா வருவது சந்தேகம்தான். ஆனால், மின்சார ஸ்கூட்டர் தொழில்நுட்பம் கைவசம் வைத்திருக்கும் பியாஜியோ குழுமம் விரைவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா பிராண்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 8, 2021, 18:37 [IST]
English summary
Piaggio One electric scooter specifications and features details revealed ahead of launch in Europe.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+