ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

ப்ரீவைல் எலக்ட்ரிக் (Prevail Electric) நிறுவனம் அதன் புதிய மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுக தேதி குறித்த விபரங்களை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ரீவைல் எலக்ட்ரிக், எலைட், ஃபைனஸ், ஓல்ஃப்யுரி என்ற மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

இந்த நிலையில் இவை மூன்று இந்த ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இந்த மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் டாப் ஸ்பீடு சற்று குறைவாகும்.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

இதில் ஒன்று 50 kmph, மற்றொன்று 60 kmph, மூன்றாவது ஒன்று 80 kmph ஆகும். ஆனால் இவை மூன்றும் ரேஞ்சை 100கிமீ-க்கும் அதிகமாக வழங்கவுள்ளன. ரேஞ்ச் என்பது 100% பேட்டரி சார்ஜில் இருந்து 0% வரையில் எலக்ட்ரிக் மோட்டார் ஸ்கூட்டரை இயக்கி செல்லும் அதிகப்பட்ச தொலைவாகும்.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லக்கூடிய எலைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 200 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்ல முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். அடிக்கடி ஸ்கூட்டரில் இருந்து நீக்கும் விதத்தில் எலைட்டில் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படவுள்ளது.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி கொண்டு 110கிமீ வரையில் செல்ல முடியுமாம். 0-வில் இருந்து இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்கள் தேவைப்படும். இந்த இ-ஸ்கூட்டரில் நாவிகேஷன், மொபைல் போன் அழைப்பு மற்றும் இசைக்கான எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

அதுமட்டுமின்றி ஒரு தொடுதல் மூலம் சரிசெய்யும் செயல்பாட்டுடன் 55ஏ கண்ட்ரோலரின் கட்டுப்பாட்டு மாதிரியையும் எலைட் பெற்றுவரவுள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 60kmph வேகத்தில் செல்லக்கூடிய ஃபைனஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 200 கிலோ எடையை ஏற்றி செல்ல முடியும்.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

அதேபோல் லித்தியம்-இரும்பு பேட்டரி, அது வழங்கக்கூடிய 110கிமீ ரேஞ்ச் மற்றும் சார்ஜ் ஆகும் நேரம் உள்ளிட்டவற்றிலும் இந்த ஸ்கூட்டரில் மாற்றமில்லை. இந்த ஸ்கூட்டர் மாடல், ஒரு-தொடு திருத்த செயல்பாட்டுடன் 12-குழாய் ப்ரஷ்லெஸின் கட்டுப்பாட்டு மாதிரியை பெற்றுவரவுள்ளது.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

இதே கட்டுப்பாட்டு மாதிரியை தான் ப்ரீவைலின் மூன்றாவது ஸ்கூட்டரான ஓல்ஃப்யுரி-யும் பெற்றுவரவுள்ளது. ஓல்ஃப்யுரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 50kmph ஆகும். இந்த மூன்று இ-ஸ்கூட்டர்களும் அதிக வலிமை கொண்ட இரும்பினால் தயாரிக்கப்பட்டு வருவதாக ப்ரீவைல் எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ரீவைல் எலக்ட்ரிக்கின் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! ஒவ்வொன்றின் ரேஞ்சும் 100கிமீ-ஐ தாண்டுது!

இதனுடன் அலாய் சக்கரங்கள் அலுமினியத்தால் உருவாக்கப்படுவதால் பேட்டரியை நீக்கினால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எடை வெறும் 80 கிலோ மட்டுமே ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருட உத்தரவாதம் வழங்கப்பட உள்ளது.

இதில் எலைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.129,999 ஆகவும், ஃபைனஸ் ரூ.99,999 மற்றும் ஓல்ஃப்யுரி ரூ.89,999 ஆகவும் உள்ளன.

Most Read Articles
English summary
One of India’s leading electric vehicle manufacturers, Prevail Electric, an automotive solution providing startup, is gearing up to launch three premium-model scooters -- Elite, Finesse, and Wolfury. Reforming the booming Indian electric mobility space, the brand aspires to cater to the growing demands of the e-vehicles enthusiast by offering them an all-encompassing solution that seamlessly blends technology with affordable and renewable alterations for a superior riding experience.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X