விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்க்க எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

சுசுகி அக்செஸ் ஸ்கூட்டர் உரிமையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்காக நினைவு கோபுரம் எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் போலீஸ்காரர்கள்தான் அவர் புகார் முன் வைத்திருக்கின்றார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

நாட்டின் ஏதேனும் ஓர் மூலையில் ஏதாவது ஓர் பிரச்னைக்காக மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், நாட்டில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுமே அனைவரையும் ஈர்த்து விடுவதில்லை. அதேவேலையில் ஒரு சில போராட்டங்கள் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

ஒரு சில போராட்டாங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து விடுகின்றன. அந்தவகையில், பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறிய ஓர் விநோதமான போராட்டம் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

புனேவின் பூசாரி சவுக் (Bhusari chowk) பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் தன்குடே (Sachin Dhankude). இவர் சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரை பயன்படுத்தி வருகின்றார். இந்த ஸ்கூட்டருக்கு பூசாரி சவுக் பகுதியில் ஓர் நினைவு தூணை அமைத்திருக்கின்றார். நினைவு தூணை அமைத்தது மட்டுமின்றி அந்த தூணின் மீது அவர் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரையும் நிற்க வைத்திருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

புனே நகர போலீஸாருக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை அவர் கையிலெடுத்திருக்கின்றார். முன்னதாக சச்சின் தன்குடேவின் இருசக்கர வாகனம் பல முறை புனே நகர போக்குவரத்து போலீஸாரால் டோவ் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

இதுவே சச்சின் தன்குடே போராட்டத்தைக் கையிலெடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. காவல்துறை சார்பில் இருசக்கர வாகனம் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் நிறுத்தம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த காரணத்திற்காகவே தாங்கள் அவரின் சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரை டோவ் செய்திருக்கின்றோம் விளக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

இது பொதுவான விஷயம்தானே. நோ பார்க்கிங்கில் பார்க் செய்யப்படும் வாகனங்களை டோவ் செய்வதும், அவற்றிற்கு அபராதம் விதிப்பதும் வழக்கமானது தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சச்சின் தன்குடே, தனது இருசக்கர வாகனம் இதுவரை ஒரு முறை கூட நோ பார்க்கிங்கில் நிறுத்தியது இல்லை. ஆனால், பல முறை போலீஸாரால் எனது வாகனம் டோவ் செய்யப்பட்டிருக்கின்றது.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

மேலும், எனது வாகனம் நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்கான சான்று ஒன்றுகூட போலீஸார் இதுவரை எனக்கு வழங்கவில்லை என அவர் தரப்பில் நியாயம் தெரிவித்தார். தொடர்ச்சியாக போலீஸார் தனது இருசக்கர வாகனத்தை டோவ் செய்து வருகின்ற காரணத்தினால் தான் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

சிறிய கோயில் போன்ற ஓர் கோபுரம் அமைத்து, அதனுள் ஓர் பிள்ளையார் சிலையை வைத்திருக்கின்றார். அதன் மேல் பகுதியிலே சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் நிற்க வைக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், கோபுரத்தின் முன் பகுதியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர் ஒட்டியிருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

"பார்க்கிங் இட ஒதுக்கீடு நம் உரிமை, எவரின் தந்தையும் நம்மை தடுக்க முடியாது", "அடுத்த நிறுத்தத்தில் காவலர்கள் இருக்கிறார் என பயப்பட வேண்டாம்" போன்ற பல்வேறு வாசகங்களை கோபுரத்தில் பயன்படுத்தியிருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

நோ பார்க்கிங்கில் ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறி அதனை காவலர்கள் பறிமுதல் செய்து 80 நாட்கள் கழித்தே அவ்வாகனத்தை சச்சினிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தனது தீவிரப் போராட்டத்தை அவர் கையிலெடுத்திருக்கின்றார். தான் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தவில்லை என பல முறை எடுத்துரைத்தும் காவலர்கள் அவர் நியாயத்தைக் கண்டுக் கொள்ளாமல் டோவ் செய்ததாகக் கூறப்படுகின்றது.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

இதுவே அவர் விரக்தியின் உச்சத்திற்கு செல்ல காரணமாக அமைந்திருக்கின்றது. நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுவத்துவதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் விபத்துகள் கூட அரங்கேறுகின்றன. இதனைத் தவிர்க்கும் பொருட்டே போக்குவரத்துத் துறை காவலர்கள் நோ பார்க்கிங்கிற்காக கடுமையான எடுத்து வருகின்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைனு நினைச்சுடாதீங்க... காவல்துறை கவனத்தை ஈர்ப்பதற்கு எழுப்பப்பட்ட டூ-வீலர் கோபுரம்!

அதே நேரத்தில் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் சில நேரங்களில் அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை புனேவில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. அதிலும், அவர் கையாண்டிருக்கும் யுக்தி பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Source: Punekarnews

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pune man builds monument tower with suzuki access 125 scooter
Story first published: Friday, September 17, 2021, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X