Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேட்டரி மெக்கானிக்கை தேடி அலைய வேண்டாம்... தானாகவே சரி செய்துகொள்ளும்... ஐஐடி-யின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!
குறைபாடுகளைத் தானாகவே கண்டறிந்து சரி செய்யக்கூடிய ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட பேட்டரியை ப்யூர் ஈவி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பேட்டரிகள், மின் வாகனங்களின் முக்கிய அங்கமாகும். இதனை உணர்ந்த ப்யூர் ஈவி நிறுவனம் குறைபாடுகளைத் தானாகவே கண்டறிந்து, அதனைத் தானாகவே தீர்த்துக்கொள்ளக் கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியிருக்கின்றது. இதற்காக செயற்கை நுண்ணறிவு உந்துதல் திறனுடைய வன்பொருள் ஒன்றை அது பயன்படுத்தியிருக்கின்றது.

ப்யூர் ஈவி, ஐஐடி ஐதபாரத்திற்கு சொந்தமான ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது இப்ளூடோ 7ஜி, எடரென்ஸ் நியோ, எடரென்ஸ், எக்னைட் மற்றும் எடரோன் ப்ளஸ் ஆகிய ஐந்து மின்சார இருசக்கர வாகனங்களை அது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றிலேயே விரைவில் புதிய தொழில்நுட்பத்தை ப்யூர் ஈவி அறிமுகம் செய்ய இருக்கின்றது.

2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு பின்னர் விற்பனைக்கு வரும் ப்யூர் ஈவி-யின் அனைத்து தயாரிப்புகளிலும் இது எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வசதியைப் பெறும் எந்தவொரு மின்சார ஸ்கூட்டரும் பேட்டரியில் கோளாறு என்ற ஒன்றை சந்திக்கவே சந்திக்காது என தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளிக்கின்றது.

குறிப்பாக, பேட்டரி திறனில் பிரச்னை என்ற காரணத்திற்காக சர்வீஸ் சென்டர் அல்லது மனித உதவியை நாட வேண்டியதில்லை என அது உறுதியுடன் கூறுகின்றது. இந்த திறனுக்காக ஆர்டிஃபிசியல் நரம்பு மண்டலத்தை (ANN - Artificial Neural Network) நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதனையே மேற்கூறிய அனைத்து மின்சார வாகனங்களையும் அது பயன்படுத்த இருக்கின்றது. மேலும், எதிர்கால தயாரிப்பிலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அது திட்டமிட்டிருக்கின்றது.

இப்புதிய தொழில்நுட்பம் கொண்ட பேட்டரிக்கு பேட்ரிக்ஸ் ஃபராடே (BaTRics Faraday) எனும் பெயரை ப்யூர் ஈவி வைத்திருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பு எலெக்ட்ரோ செல்கள் பேட்டரியில் எந்த மாதிரி கோளாறு ஏற்பட்டாலும் தானாகவே சரி செய்துவிடும்.

குறிப்பாக, கோளாறுகளைத் தானாகவே தேடிக் கண்டறிந்து, அதனை அதுவே சரி செய்துவிடும். இதனை தானாகவே பேட்டரி செய்து கொள்ளும் என்பதால் எந்தவொரு மனித ஈடுபடும் தேவையில்லை என கூறப்படுகின்றது.

"பேட்டரியில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிவதும், அதனைச் சரி செய்வதும் சற்று கடினமானது. எனவேதான் இப்பணியைத் தானியங்கி முறையில் சரி செய்யும் வசதியை பேட்ரிக்ஸ் ஃபாரடே பேட்டரியில் நாங்கள் வழங்கியுள்ளோம்" ப்யூர் ஈவி நிறுவனத்தின் நிறுவனர் நிஷாந்த் டோங்கோரி கூறியிருக்கின்றார்.