ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

வேலையில்லா சூழலுக்கு தள்ளப்பட்டு வரும் ஃபோர்டு மோட்டார்ஸின் பணியாளர்கள் மற்றும் டீலர்களுக்கு வாழ்வு அளிக்கும் விதமாக தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு ராஃப்ட் மோடடார்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

அமெரிக்க ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனையை நிறுத்தி கொள்ளவுள்ளது கடந்த சில வாரங்களாக செய்தியாக உள்ளது. இந்தியாவில் தங்களது வணிகம் நஷ்டத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்து இந்த முடிவை ஃபோர்டு அறிவித்தது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் பெரும்பான்மையான வாகன தயாரிப்பு பணிகள் குஜராத்தில் உள்ள சனத் தொழிற்சாலையில் தான் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவை அனைத்தையும் இந்த ஆண்டிற்குள்ளாக நிறுத்தி கொள்ளவுள்ளதாக ஃபோர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

ஃபோர்டிற்கு நமது சென்னையிலும் தொழிற்சாலை உள்ளது. ஆனால் இங்கு குறைவான பணிகளே நடைபெற்று வருகின்றன. இங்கு பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் தான் நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாம். இதனால் ஃபோர்டு நிறுவனத்தின் டீலர்களுக்கும், தொழிற்சாலை பணியாளர்களுக்கு வேலை பறி போகவுள்ளது உறுதியாகிவிட்டது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

இதனாலேயே அவர்கள் இப்போதில் இருந்தே வேறு நிறுவனத்தில் வேலையை தேட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் தான் தற்போது ராஃப்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு பணியாளர்களையும், டீலர்களையும் தாங்கள் பணியில் அமர்த்தி கொள்வதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

இதன்படி, மும்பையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் சேர விரும்புவோர் தங்களது விபரங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் உள்நாட்டு பிராண்ட்களுள் ஒன்றாக ராஃப்ட் மோட்டார்ஸ் விளங்குகிறது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

தற்போதைக்கு, 2022 மார்ச் மாதத்திற்கு உள்ளாக முன்மொழியப்பட்ட 100 மினி தொழிற்சாலைகளில் இருந்து மாதத்திற்கு 50,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வணிகத்தை பெருக்க வேண்டும் என்பது தான் ராஃப்ட் மோட்டார்ஸின் ஒரே குறிக்கோளாக உள்ளது. மினி தொழிற்சாலைகளாக இருந்தாலும் 100 என்பது மிக அதிகம்.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

திட்டமிட்டப்படி 100 மினி தொழிற்சாலைகளையும் இந்த மும்பை எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் நிறுவி விட்டால், வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட அடுத்த நாளிலேயே வாகனத்தை டெலிவிரி செய்ய முடியும். ராஃப்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தற்சமயம் 550 டீலர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

மொத்தம் 12 மாநிலங்களில் இந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலை வசதி உள்ளது. எலக்ட்ரிக் பேட்டரிக்கு அதிரடியாக 1 லட்ச கிமீ உத்தரவாதத்தை வழங்கிய முதல் இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனம் ராஃப் மோட்டார்ஸ் ஆகும். வாரியர், சோல்ஜர், நுப்ரா, ஜிஸ்பா, இண்டுஸ், டீஸ்டா மற்றும் இந்திரஜீத் என்பவை ராஃப்ட் மோட்டார்ஸ் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாகும்.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

பெட்ரோல் விலை உயர்வினால் இவற்றின் விற்பனை நல்லப்படியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் பெரும்பாலான இளைஞர்களால் அறியப்பட்ட பிராண்ட்டாக ராஃப்ட் விளங்குகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு மத்தியில், மலிவான கட்டணத்தில் சார்ஜ் வசதியை வழங்கும் சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பிலும் ராஃப்ட் மோட்டார்ஸ் ஈடுப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுடன், ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகள் மற்றும் ஹை-ஃபை கரோக் அமைப்புகளும் ராஃப்ட் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார் ஒன்றினையும் வடிவமைக்க திட்டமிட்டுள்ள இந்த மும்பை நிறுவனம் அதனை சுமார் 1,600 கிமீ ரேஞ்சில் வழங்க முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம்!! மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்!

அதாவது அந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 1,600 கிமீ வரையில் செல்லலாமாம். இந்த ராஃப்ட் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் 2023ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.99 என்கிற மிக குறைவான கட்டணத்தில் 5-நாள் பயிற்சி திட்டங்களையும் ராஃப்ட் நிறுவனம் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சிகள் முடிந்த பிறகு எவர் ஒருவரும் சர்வீஸ் நிலையத்தை தங்களது பகுதியில் நிறுவ முடியும். அல்லது இந்த பயிற்சி மூலகாக கிடைத்த அனுபவங்களின் உதவியுடன் இதே துறையில் வேறு எதாவது வேலையினை தேடி கொள்ள முடியும் என்கிறது ராஃப்ட் மோட்டார்ஸ்.

Most Read Articles
English summary
Raft Motors announces good news for dealers and employees of Ford.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X