காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

இந்தியாவின் மிக பெரிய பைக் டாக்ஸி ப்ளாட்ஃபாரமான ராபிடோ புதியதாக எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிப் எலக்ட்ரிக் என்ற டெலிவிரி அப்ளிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து ராபிடோ கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவையை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்று மாசுவை குறைக்கவும், மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன டாக்ஸி சேவையை ராபிடோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

இந்த சேவையில் பயன்படுத்தப்படவுள்ள 100 ரைடர்கள் மற்றும் எலக்ட்ரிக் இரு-சக்கர வாகனங்களை கூட்டணி முடிவின்படி ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து ராபிடோ பெற்றுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு முதற்கட்டமாக இந்த எலக்ட்ரிக் இரு-சக்கர டாக்ஸி சர்வீஸ் சோதித்து பார்க்கப்பட உள்ளது.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

இந்த சோதனை முயற்சி முதலாவதாக டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தே இந்த டாக்ஸி சேவையை மற்ற இந்திய நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கான பணியினை துவங்கவுள்ளதாக ராபிடோ தெரிவித்துள்ளது.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

மேலும், இந்த வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கு மேலும் சில இவி பார்ட்னர்களையும் கூட்டணியில் இணைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. புதிய இவி ரைட்களையும் ராபிடோ அப்ளிகேஷனில் வழக்கம்போல் பெறலாம்.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

அதேநேரம் இவி ரைட்களுக்கான கட்டணமும் வழக்கமான ராபிடோ ரைட் கட்டணம் அளவிலேயே இருக்கும். மேலும் இந்த புதிய எலக்ட்ரிக் வாகன ரைட்களிலும் முறையான கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

இந்த வழிமுறைகளின் படி ஒவ்வொரு ரைடின் போதும் ஓட்டுனர்கள் குறைந்தப்பட்சம் வாடிக்கையாளர் அமரும் பகுதியினையாவது சுத்தம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் முகமூடி அணிவது கட்டாயமாக பின்பற்றப்படும்.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

ராபிடோ இவி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்த பின்பு பேசிய ராபிடோவின் துணை நிறுவனர் அரவிந்த் சன்கா, பெரிய இரு-சக்கர வாகன சந்தையான இந்தியாவில் 1 சதவீதம் மட்டுமே எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன பயன்பாடு உள்ளது.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ ஏர் தொழிற்நுட்ப நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில் உலகளவிலான காற்று தரத்தில் நம் தலைநகர் டெல்லிக்கு மிகவும் காற்று மாசுள்ள நகரம் என்ற பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையை மாற்ற எங்களது இந்த முடிவு சிறிய அளவிலாவது உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறினார்.

காற்று மாசுவை குறைக்க, ராபிடோவின் புதிய சேவை!! இன்று முதல் அறிமுகமாகிறது...

காற்று மாசு மட்டுமில்லாமல் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடுமையான உயர்த்தப்பட்டு வருவதாலும், மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தள்ளப்படுகின்றனர். இதுவே புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது.

Most Read Articles
English summary
India's largest bike taxi platform, Rapido, has launched an electric two-wheeler taxi service. The ride-hailing platform has partnered with Zypp Electric to provide EV service in the country.
Story first published: Thursday, March 25, 2021, 2:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X