பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பிரபல பைக் கால் டாக்சி நிறுவனமான ரேபிடோ பைக்கை வாடகைக்கு எடுக்கும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நாட்டின் பிரபல பைக் டாக்சி நிறுவனமாக ரேபிடோ, வாடகை பைக் டாக்சி சேவையை நாட்டில் தொடங்கியுள்ளது. முன்னதாக பிக்-அப் மற்றும் டிராப் சேவையை மட்டுமே செய்து வந்த இந்நிறுவனம் தற்போது வாடகைச் சேவையையும் அறிவித்துள்ளது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஒரு மணி நேரம் தொடங்கி ஆறு மணி நேரம் வரை பேக்கேஜ் திட்டத்தின் அடிப்படையில் இச்சேவையை வழங்க இருப்பதாக ரேபிடோ அறிவித்திருக்கின்றது. இதில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணாக ரூ. 99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரம் அல்லது 10 கிமீ என்ற விகிதத்திலேயே இச்சேவை வழங்கப்பட இருக்கின்றது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இதேபோன்று 6 மணி நேரம் பேக்கேஜிற்கு 60 கிமீ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் ரூ. 599 ஆகும். இந்த சேவைகுறித்து ரேபிடோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஆறு மணி நேரங்கள் என்றதன் அடிப்படையிலேயே ரேபிடோ வாடகை பைக் சேவை வழங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மேலும், இந்த பேக்கேஜ் சேவையின்போது எங்களின் பார்ட்னர் எப்போதும் தொடர்பிலேயே இருப்பார். இடையில் வேறொரு பிக்-அப்பினையோ அல்லது வேறு பணிக்கோ அவர்கள் செல்ல மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் ரேபிடோ வழங்கியுள்ளது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்த சேவையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நல்ல ரேட்டிங்கைப் பெற்ற பார்ட்னர்களே பயன்படுத்தப்பட இருப்பதாகவும் ரேபிடோ தெரிவித்திருக்கின்றது. இந்த சேவையை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே ரேபிடோ தொடங்கியுள்ளது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில் சென்னை, ஹைதராபாத், டெல்லி-என்சிஆர், கொல்கத்தா மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் மட்டுமே இச்சேவை வழங்கப்பட இருக்கின்றது. முதல் கட்டமாக தொடங்கப்பட்டிருப்பதால் இந்த நகரங்களில் மட்டுமே தற்போது இச்சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்... சென்னையில் சிறப்பு சேவையை தொடங்கியது ரபிடோ... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அதேசமயம், விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ரேபிடோ தெரிவித்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, தனது பார்ட்னர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், வாடிக்கையாளர்கள் தடையில்லா ஆகிய நோக்கங்களுக்காகவும் இச்சேவையைத் தொடங்கியிருப்பதாக ரேபிடோ தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapido Announces Rental Bike Services In 6 Cities. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X