120 ஆண்டுகள் கொண்டாட்டம்... ஸ்பெஷல் தோற்றத்தில் Royal Enfield இரட்டையர்கள் அறிமுகம்! வேற லெவல்ல இருக்கு!
ராயல் என்பீல்டு நிறுவனம் 120 ஆண்டுகளை நிறைவு செய்யும் வரலாற்று நிகழ்வை முன்னிட்டு, அதன் இரட்டையர் பைக்கு மாடல்களான இன்டர்செப்டார் 650 (Interceptor INT 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய இரு பைக் மாடல்களை சிறப்பு பதிப்பு வாகனங்களாக உருவாக்கி, அவற்றை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு பைக்கை நிறுவனம் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எத்தனை யூனிட்டுகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு பதிகளின் முக்கிய அம்சம் என்ன என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் கீழே காணலாம், வாங்க.

உலகின் மிகவும் பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் ஒன்று. இந்நிறுவனம் முதல் முறையாக 1901ம் ஆண்டிலேயே வாகன உற்பத்தியில் ஈடுபட தொடங்கியது. இப்பணியில் நிறுவனம் களமிறங்கி 120 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு நிறுவனம் மிக சமீபத்தில் ஹேண்ட் பெயிண்டட் மற்றும் ஹேண்ட் கிராஃப்டட் ஹெல்மெட்டுகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது இரு புதிய இருசக்கர வாகன மாடல்களை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

நிறுவனத்தின் புகழ்மிக்க பைக் மாடல்களான இன்டர்செப்டார் 650 (Interceptor INT 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய பைக் மாடல்களிலேயே 120 ஆண்டுகள் சிறப்பிக்கின்ற ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை உலக அரங்கான இஐசிஎம்ஏ (EICMA) 2021-இல் ராயல் என்பீல்டு முதல் முறையாக காட்சிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிகழ்வு உலகளவில் இச்சிறப்பு பதிப்புகளை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு செல்ல இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. 120 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இந்த சிறப்பு பதிப்பு உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த தினத்தை நினைவுப்படுத்தக் கூடிய பல சிறப்பு அணிகலன்கள் இருசக்கர வாகனத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், சிறப்பு தோற்றம் கொண்ட சின்னம், நிறம் மற்றும் கிராஃபிக்குகள் ஆகியவை இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம், வெளிப்புற தோற்றத்தில் மட்டுமே சிறப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் மற்றும் பிற சிறப்பம்சங்கள் விஷயத்தில் எந்த வேலையும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், வழக்கமான ட்வின் பைக்குளில் இருக்கக் கூடிய அம்சங்ளே இந்த இருசக்கர வாகனத்திலும் காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில், சில புதிய அம்சங்களும் இடம் பெற்றிருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த சிறப்பு பதிப்பு ட்வின் பைக்குகளை ஒட்டுமொத்தமாகவே வெறும் 480 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இத்தனை யூனிட்டுகளும் வெறும் இந்தியாவிற்கு மட்டுமே என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலக சந்தைக்குமே 480 யூனிட்டுகள் மட்டும்தான் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசியா ஆகிய நான்கு நாடுகளுக்கும், ஒவ்வொன்றிற்கும் 120 யூனிட்டுகள் என நிறுவனம் பங்கு பிரித்துள்ளது. 120 யூனிட்டுகளில் 60 கான்டினென்டல் ஜிடி650 மாடலும், இன்டர்செப்டார் ஐஎன்டி 650, 60 யூனிட்டுகளாகவும் வழங்கப்பட இருக்கின்றன.

இவ்விரு இருசக்கர வாகனங்களுக்கு முன்னதாக 120 ஆண்டுகளை சிறப்பிக்கும் விதமாக ஹெல்மெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 12 தசாப்தங்களை (12 பத்து மாதங்களை)-க் குறிக்கும் வகையில், 12 புதிய ஹெல்மெட்டுகள் களமிறக்கப்பட்டன. அனைத்தும், முன்னதாக கூறியதைப் போலவே ஹேண்ட் பெயிண்டட் மற்றும் ஹேண்ட் கிராஃப்டடாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது சிறப்பு தகவலாகும்.

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் முதல் இருசக்கர வாகன மாடலை ஸ்டான்லி சைக்கிள் ஷோ, லண்டனிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. அன்று இந்த உலகில் நிறுவனம் தொடங்கிய பயணம் தற்போது 120 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போதும் தொடர்ந்து வருகின்றது. இதற்கு நிறுவனத்தின் தயாரிப்புகளின்மீது நிலவும் நம்பிக்கையும், இதற்காக நிறுவனம் மேற்கொண்டு வரும் சிறப்பு முயற்சிகளுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
குறிப்பு: கடைசி மூன்று படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








