புதிய வெள்ளை நிறத்தேர்வை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிற்கு புதிய நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது நம் இந்தியர்கள் மத்தியில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

இதனால் இத்தகைய மின்சார 2-வீலர்ஸை உருவாக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதேநேரம் ஏற்கனவே சந்தையில் அறிமுகமாகிவிட்ட எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விற்பனையில் இருக்கும் தங்களது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அப்டேட் செய்து பலப்படுத்தி வருகின்றன.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

இந்த வகையில் தற்போது நம் நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிவோல்ட் மோட்டார்ஸ் அதன் முதன்மையான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ரிவோல்ட் ஆர்வி400-க்கு புதிய நிறத்தேர்வை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த புதிய நிறத்தேர்வுக்கான பெயரை தற்போதைக்கு ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

படங்களை மட்டுமே ரிவோல்ட் மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் சர்மா அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளர். இந்த டுவிட்டர் பதிவில் புதிய நிறத்தேர்வின் பெயர் எதையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

இந்த படங்களில் கருப்பு நிற ஹைலைட்களுடன், சில்வர் வெள்ளை நிறத்தில் பைக் காட்சியளிக்கிறது. இந்த புதிய நிறத்தேர்வை சேர்த்து மொத்தம் 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. மற்றப்படி இயந்திர பாகங்களில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் 'ஸ்டார்ட்டிற்கு ஸ்வைப்' என்ற புதிய வசதியினை ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் ரிவோல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த புதிய தொழிற்நுட்ப வசதி ஆனது மை ரிவோல்ட் என்ற மொபைல் செயலியின் மூலமாக சாவியில்லாமல் மோட்டார்சைக்கிளை ஸ்டார்ட் செய்ய உதவும்.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

மேலும் இந்த வசதியின் வாயிலாக ரைடர் பைக்கின் செயற்கை நுண்ணறிவு திறனை அவர்களது ஸ்மார்ட்போனில் ஆன் செய்யவோ அல்லது ஆஃப் செய்யவோ முடியும். இதற்கு மை ரிவோல்ட் செயலியை வாடிக்கையாளர் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு செயலிக்குள் சென்று பவர் பொத்தானை இடது பக்கத்தில் இருந்து வலதுப்பக்கத்திற்கு நகர்த்தி ஆன் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

புதிய வெள்ளை நிறத்தை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

இந்த வசதி ரைடரை சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்ய அனுமதிப்பது மட்டுமின்றி, லாக், அன்லாக் மற்றும் பைக்கின் இருப்பிடத்தை கண்டறிவது உள்ளிட்ட செயல்பாடுகளை தங்களது ஸ்மார்ட்போன் மூலமாக சுதந்திரமாக மேற்கொள்ளவும் உதவும்.

புதிய வெள்ளை நிறத்தேர்வை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

ஆர்வி400 இ-பைக்கில் 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இதற்கு ஆற்றலை வழங்க 72 வோல்ட், 3.24 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இவற்றின் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 85கிமீ வேகத்தில் செல்லலாம்.

புதிய வெள்ளை நிறத்தேர்வை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

ரிவோல்ட்டின் 'மை ரிவோல்ட்' மொபைல் செயலியால் ஏற்கனவே கூறியதுபோல் பைக் நின்றிருக்கும் இடத்தை கண்டுப்பிடிப்பது மட்டுமின்றி, இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் ஒரு டேப்-ஐ க்ளிக் செய்வதன் மூலம் பைக்கின் ஹார்ன் சவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய விரிவான விபரங்களையும் தெரிந்த கொள்ளலாம்.

புதிய வெள்ளை நிறத்தேர்வை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

அத்துடன் பேட்டரியின் நிலை, இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் & கிமீ-கள் குறித்த தகவல்களை பெறுவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் ரிவோல்ட் ஸ்விட்ச் நிலையத்தையும் ஆர்வி400-இன் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் மூலம் கண்டறிந்து கொள்ளலாம்.

புதிய வெள்ளை நிறத்தேர்வை பெற்றுள்ள ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் முன்பதிவு ஆரம்பம்!

பைக்கிற்கான பேட்டரியை மாற்றிக்கொள்ளும் இடமான ரிவோல்ட் ஸ்விட்ச் நிலையத்தில் இருந்து, சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து புதிய பேட்டரியை பெற்று கொண்டு வெறும் 60 வினாடிகளில் கிளம்பிவிடலாம் என்கிறது ரிவோல்ட் மோட்டார்ஸ். ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்களுடன் வழங்கப்படும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் விலை தற்சமயம் ரூ.90,799 ஆக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt introduced new colour options for rv400 electric motorcycl
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X