ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ரிவோல்ட் மின்சார பைக்கின் விலை ரூ.28,000 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் மாடலானது 125சிசி பெட்ரோல் பைக்குகளுக்கு நிகரான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை பல முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக குறைத்து வருகின்றன. அந்த வகையில், ரிவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி400 மின்சார பைக்கின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

இதன்படி, ரூ.1.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆர்வி400 பைக் இனி ரூ.90,799 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

அதாவது, மத்திய அரசு அறிவிப்பால், ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் விலை ரூ.28,200 அதிரடியாக குறைந்துள்ளது. இதனால், ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் இனி 125சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட பைக்குகளுக்கு இணையான விலையில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

ரிவோல்ட் ஆர்வி300, ஆர்வி400 பைக்குகளுக்கு மீண்டும் நாளை நண்பகல் 12 மணிக்கு புக்கிங் திறக்கப்பட உள்ளது. சென்னை, ஹைதராபாத், டெல்லி, புனே, மும்பை மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் புக்கிங் துவங்கப்பட உள்ளது. இந்த சூழலில், இந்த விலை குறைப்பு அறிவிப்பு இந்த பைக்கை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளுக்கு முறையே ரூ.7,199 மற்றும் ரூ.7,999 செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு துவங்குவது குறித்து தகவல் பெற விரும்புவோர் இப்போதே ரிவோல்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 3.24kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் 3kW மின் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் செல்லும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும்.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் மைரிவோல்ட் மொபைல் ஆப் கனெக்ட்டிவிட்டி மூலமாக பைக்கை குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே செல்லாதவாறு கட்டுப்படுத்த முடியும். பைக்கின் பழுது, பேட்டரி உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. அதேபோன்று, இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை ரூ.28,000 குறைப்பு... அப்ப நாளைக்கே புக் பண்ணிடலாமா?

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மின்சார பைக்குகள் தற்போது ஆறு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 35 நகரங்களில் விற்பனையை துவங்குவதற்கு ரிவோல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Intellicorp has slashed the RV400 price by Rs 28,200 after the FAME II Incentive revision.
Story first published: Thursday, June 17, 2021, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X