ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

தற்போது விற்பனையில் இருக்கும் தனது தயாரிப்பிலேயே மிகக் குறைந்த விலை எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட் மிக விரைவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் பைக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ரட்டன் இந்தியா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விளம்பரதாரர் அஞ்ஜலி ரட்டன் பிடிஐ-க்கு அளித்துள்ளார்.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

அவர், "ரிவோல்ட் நிறுவனம் ஆர்வி1 எனும் எலெக்ட்ரிக் பைக்கை உற்பத்தி செய்ய இருப்பதாக" கூறியுள்ளார். "இது ஓர் விலைக் குறைந்த எலெக்ட்ரிக் பைக் என்றும். இதன் உற்பத்தி பணிகள் 2022 ஜனவரிம் மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும்" என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

ரிவோல்ட் மோட்டார்ஸ் தனது உற்பத்தி ஆலையை ஹர்யானா மாநிலம், மனேசர் பகுதியில் இயக்கி வருகின்றது. இங்கு வைத்தே மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனம் கட்டமைக்க இருக்கின்றது. உள்ளூரில் வைத்து உள்ளூர் பாகங்களைக் கொண்டே இந்த மின்சார பைக் உருவாக்கப்பட இருக்கிறது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

சீனாவில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தநிலையில் உள்ளூரில் உற்பத்தியாகும் பாகங்களை மட்டுமே கொண்டு மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்க இருப்பதாக ரிவோல்ட் மோட்டார்ஸ் கூறியிருக்கின்றது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

இதற்கான பணிகள் 2021 டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மலிவு விலை மின்சார பைக் அறிமுகத்தைத் தொடர்ந்து மற்றுமொரு அதிர்ச்சியான தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் ஆர்வி300 மின்சார பைக்கிற்கு மாற்றாகவே புதிய மலிவு விலை ஆர்வி1 மாடல் களமிறங்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஆர்வி 300 சந்தையை விட்டு வெளியற்றப்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

புதிய முதலீடு மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகிய உந்துதலுடன் செயல்பட ரிவோல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வணிகத்தை பல மடங்கு உயர்த்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையிலேயே மலிவு விலை மின்சார பைக் உற்பத்தியை நிறுவனம் கையிலெடுத்துள்ளது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு ஃபேம்2 திட்டத்தின்கீழே மானியம் உள்ளிட்ட பலேவேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட எலெக்ட்ரிக் டூ வீலர்களுக்கான மானியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆகையால், மிக விரைவில் இந்திய சாலைகளை மின் வாகனங்கள் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

இந்த மாதிரியான சூழ்நிலையில் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம்குறித்த அறிவிப்பை ரிவோல்ட் வெளியிட்டிருப்பது இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ரிவோல்ட் மின்சார வாகனங்களுக்கு எதிர்பார்த்திராத அளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி!

எனவே ஆண்டுக்கு 5 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி என்ற விகிதத்தில் இயங்க ரிவோல்ட்திட்டமிட்டுள்ளது. நிறுவனம் தற்போது ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ரிவோல்ட் ஆர்வி400 ஆகிய இரு விதமான மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனைச் செய்து வருகின்றது.

Most Read Articles

English summary
Revolt Will Launch Affordable RV1 e-Bike Soon In India. Read In Tamil.
Story first published: Monday, July 26, 2021, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X