இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

ரெவோஸ் (Revos) நிறுவனம் போல்ட் (Bolt) என்கிற பெயரில் இந்தியாவின் முதல் மற்றும் பெரிய பியர்-டு-பியர் (மைய செயல்பாட்டு அமைப்பு இல்லாத இணைப்பு) எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

எலக்ட்ரிக் வாகனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள போல்ட் ஒஎஸ் (OS) ஆனது மிகவும் நேர்த்தியாக தற்போது செயல்முறைகளுடன் ஒருங்கிணைக்கவல்லது மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சந்தை போக்கிற்கு ஏற்ப தயாரிப்புகளை மேம்படுத்த உதவ வல்லது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒருமுறை இதனை ஒருங்கிணைத்துவிட்டால் போதும். அதன்பின் வாகனத்தின் தொழிற்நுட்ப அம்சங்களை மெருக்கேற்றுவதற்காக போல்ட் இயக்க அமைப்பை நீக்க வேண்டிய தேவை இருக்காதாம். ஏனெனில் போல்ட் ஒஎஸ் ஆனது ஓவர்-தி-ஏர் அப்டேட்களை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

இந்தியா உள்பட சீனா, வியட்நாம், நேபாளம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 30 வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 10,000 தொழிற்நுட்ப சாதனங்களில் இந்த OS பயன்படுத்தி பார்க்கப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து, ரெவோஸ் நிறுவனம் போல்ட் OS-ஐ ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

ரெவோஸ் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் ரூ.3,000 என்ற விலையில் போல்ட் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அறிமுக சலுகையாக வருகிற அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து இந்த 2021ஆம் வருடம் முடியும் வரையில் போல்ட் சார்ஜிங் வசதியினை வெறும் ரூ.1-இல் வழங்க முடிவு செய்துள்ளது. போல்ட் ஒஎஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இனி பார்ப்போம்.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

இந்தியாவின் போக்குவரத்து சாலையில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 83 சதவீதம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தானாம். இதற்கிடையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

இவி விற்பனையை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் நான்கு சக்கரங்களை காட்டிலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை வேகமாக விரிவடைந்து வருவது கடந்த சில மாத விற்பனை நிலவரங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. கடந்த 2021 ஜூலை மாதத்தில் மட்டும் 13,345 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

2021 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 229% அதிகரித்துள்ளது. அதேபோல் 2020 ஜூலை உடன் ஒப்பிடுகையில் 836% உயர்ந்துள்ளது. இதில் இருந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை அறியலாம். 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மொத்த வாகன பயன்பாட்டில் குறைந்தது 30 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

மேலும் இதில், உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எலக்ட்ரிக் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வணிக ரீதியாக ஏற்றுக்கொள்வதற்கான இந்த விரைவான வேகத்தை ஆதரிக்கும் விஷயத்தில், நாட்டின் பொது சார்ஜிங் உள்கட்டமைப்பின் நிலை முக்கியமான காரணியாக இருக்கும்.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

எனவே ரெவோஸின் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆனது எலக்ட்ரிக் இருசக்கர & மூன்று சக்கர வாகன உரிமையாளர்களுக்கு பயணத்தின்போது தேவைப்படும் சார்ஜிங் நெட்வொர்க் வசதியை வழங்கும். மேலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்கள் சார்ஜ் ஏற்றி கொள்வதில் உள்ள குழப்பமான இடைவெளியை நிவர்த்தி செய்யும்.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

இதனால் ரெவோஸ் போல்ட் சார்ஜிங் நெட்வொர்க்கினால் வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் இரு & மூன்று சக்கர வாகனங்களை சார்ஜ் ஏற்றுவது, இன்று ஒருவரின் மொபைல் போனை சார்ஜ் செய்வது போல் எளிதாகவும், வசதியாகவும் மாறலாம். எலக்ட்ரிக் 2&3 வீலர்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த 2 வருடங்களில் இந்தியாவின் 500 நகரங்களில் சுமார் 1 மில்லியன் போல்ட் சார்ஜிங் மையங்களை உருவாக்க ரெவோஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

ஆல்-இன்-ஒன் இவி உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனமான ரெவோஸ் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் போல்ட் சார்ஜிங் நெட்வொர்க் ஆனது IOT-க்கு இணக்கமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள போல்ட் வெவ்வேறான தயாரிப்பு நிறுவனங்களது எலக்ட்ரிக் வாகனங்களுடன் வழங்கப்படும் கையில் எடுத்துச்செல்லக்கூடிய எந்தவொரு சார்ஜரையும் ஏற்கக்கூடியது.

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் சார்ஜிங் நெட்வொர்க், ரெவோஸ் போல்ட்!! வெறும் ரூ.1 இல் வாங்கலாம்!

அதேபோல் இவி உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், எந்தவொரு கடை, கேரேஜ்ஸ், கமர்ஷியல் பார்க்கிங் இட உரிமையாளர்களும் ரெவோஸின் போல்ட்டை வாங்கி பொருத்தி கொள்ளலாம். கூடுதலாக எந்த அமைப்பையும் போல்ட் கேட்காதது என்பதால், இதன் மூலம் கடை & பார்க்கிங் ஸ்பேஸ் உரிமையாளர்கள் மற்றொரு வழியிலும் வணிகம் பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Revos Introducing BOLT, India's First and the Largest Peer-to-Peer Electric Vehicle Charging Network.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X