அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

ஹீரோ லெக்ட்ரோ எலெக்ட்ரிக் சைக்கிள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வு மற்றும் எவ்வளவு விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் கீழே காணலாம்.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

பிரபல மின்சார மிதிவண்டி தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அதன் ஹீரோ லெக்ட்ரோ பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-மிதிவண்டிகளின் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. சரக்கு மற்றும் உள்ளீடு பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக விலையை உயர்த்தியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

புதிய வாகனங்களின் விலை அண்மைக் காலங்களாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஹீரோ லெக்ட்ரோ மின்சார மிதிவண்டிகளின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாடல்களைப் பொருத்து விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

பழைய விலையில் இருந்து 7.5 சதவீதம் தொடங்கி 12.8 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. நிறுவனம் லெக்ட்ரோ பிராண்டில் பன்முக தேர்வுகளை வழங்கி வருகின்றது. இதில் நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்பாக சி சீரிஸ் ரகம் இருக்கின்றது. இது 10 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

இந்த சீரிஸின் தற்போதைய ஆரம்ப விலை ரூ. 28,999 ஆகும். இதன் அட்வான்ஸ்ட் தேர்வான எஃப்6ஐ மாடலின் விலை ரூ. 54,999 ஆகும். ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மட்டுமே இதுமாதிரியான விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் இதுமாதிரியான அறிக்கை வெளியிட்டன.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

இதற்கும், வாகனத்தின் கட்டுமான செலவு அதிகரித்தது போன்றவையே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த மாதரியான சூழ்நிலையிலேயே இதே காரணத்தைக் காட்டி ஹீரோ சைக்கிள்கள் நிறுவனம் விலை உயர்வு பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. இது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

ஹீரோ லெக்ட்ரோ எஃப்6ஐ மின்சார மிதிவண்டியில் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் 7 ஸ்பீடு கியர் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மஞ்சள் மற்றும் கருப்பு என இரு விதமான நிற தேர்வில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

இத்துடன், ப்ளூடூத் இணைப்பு மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகிய வசதிகள் லெக்ட்ரோ எஃப்6ஐ (HERO LECTRO F6i) மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை சற்று அதிகமாக காட்சியளிக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

லெக்ட்ரோ சி9 (HERO LECTRO C9), லெக்ட்ரோ சி6ஐஇ (HERO LECTRO C6iE), லெக்ட்ரோ சி8ஐ (HERO LECTRO C8i), லெக்ட்ரோ சி5ஐஇ (HERO LECTRO C5iE), லெக்ட்ரோ சி6இ (HERO LECTRO C6E), லெக்ட்ரோ சி6வி (HERO LECTRO C6v), லெக்ட்ரோ சி7ப்ளஸ் (HERO LECTRO C7+), லெக்ட்ரோ சி8 (HERO LECTRO C8), லெக்ட்ரோ சி5வி (HERO LECTRO C5v), லெக்ட்ரோ சி6 (HERO LECTRO C6), லெக்ட்ரோ சி7 (HERO LECTRO C7), லெக்ட்ரோ சி5இ (HERO LECTRO C5E), லெக்ட்ரோ சி5 (HERO LECTRO C5), லெக்ட்ரோ சி3 (HERO LECTRO C3), லெக்ட்ரோ சி327.5 (HERO LECTRO C3 27.5) ஆகிய மாடல்களையும் ஹீரோ சைக்கிள் லெக்ட்ரோ பிராண்டின்கீழ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

நிறுவனத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நிலையங்களிலும் விலை உயர்வு செய்யப்பட்ட நிலையிலேயே லெக்ட்ரோ இ-மிதிவண்டிகள் விற்பனைக்குக் கிடைக்கும் என ஹீரோ சைக்கிள்ஸ் அறிவித்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

விலை உயர்வு குறித்து நிறுவனத்தின் லைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா முஞ்சால் கூறியிருப்பதாவது, "சரக்கு மற்றும் உள்ளீட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற வெளிப்புற சந்தை காரணிகளால் எங்கள் தயாரிப்பு வரிசையின் விலை திருத்தம் அவசியமாக இருக்கின்றது. எங்கள் தரம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய அளவுகோல்களை தொடர்ந்து பூர்த்தி செய்வதற்கு இது முக்கியமானதாக உள்ளது" என்று உறுதி செய்கிறது" என்றார்.

அதிகம் விற்பனையாகும் Hero Lectro இ-சைக்கிள்களின் விலை உயர்வு... அட என்னங்க இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்க!!

தொடர்ந்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "அனைத்து மாடல்களின் விலையும் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹீரோ லெக்ட்ரோ இந்தியா, மின்சுழற்சி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உறுதியான மதிப்பு ஆகியவற்றை முன்மொழிந்து வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து நிறுவனம் வலுப்படுத்தும். வாடிக்கையாளர்களுக்கு எளிமையான சேவையை வழங்கும் பொருட்டு ஷோரூம் மற்றும் மெய்நிகர் ஆகிய இரு வகையிலும் சேவையை வழங்கி வருகின்றது.

Most Read Articles
English summary
Rising input freight costs hero lectro e bicycle prices increased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X