மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து புதிய 650சிசி க்ரூஸர் பைக்கின் தயாரிப்பு பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

இதனால் ராயல் என்பீல்டின் இந்த புதிய க்ரூஸர் பைக் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த 650சிசி பைக்கின் ஸ்பை வீடியோ இனிகோ எம் செபாஸ்டியன் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இரு-பாதை கொண்ட நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் புதிய 650சிசி க்ரூஸர் பைக் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளதை பார்க்க முடிகிறது.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

இண்டர்செப்டர் vs மீட்டியோர் 650 ட்வின்ஸ் என்ற பெயரில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் இண்டர்செப்டர் 650 பைக்கில் இருந்து இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட, புதிய 650சிசி க்ரூஸர் பைக்கிற்கு வீடியோ பதிவிட்டவர்கள் மீட்டியோர் 650 என பெயர் வைத்துள்ளனர்.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

இதில் இண்டர்செப்டர் 650 பைக் மணிக்கு 100கிமீ வேகத்திலும், சில சமயங்களில் அதற்கும் குறைவான வேகத்திலும் இயங்குவதை வேகமானி காட்டுகின்றது. சமீபத்தில் வெளியாகி இருந்த ஸ்பை வீடியோவில் இதேபோன்ற நெடுஞ்சாலை ஒன்றில் புதிய 650சிசி க்ரூஸர் பைக் 120- 130kmph வேகத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

தற்போது கிடைத்துள்ள வீடியோவில் புதிய ராயல் என்பீல்டு க்ரூஸர் பைக்கை சற்று உற்றுப்பார்த்தால், அதன் பின் இருக்கை நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளதை அறியலாம். இது எதாவது சோதனை கருவியோ அல்லது வேறெதாவது உபகரணமோ கிடையாது, இருக்கை அமைப்பு தான் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

இருந்தாலும் அதில் ஒருவர் அமர முடியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த வீடியோவிலேயே ஓட்டுனருக்கு போக, மிகவும் குறைவான அளவிலேயே இருக்கை மிச்சம் இருக்கிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தற்போதைய இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் வழங்கப்படுகின்ற அதே 648சிசி, இணையான-இரட்டை என்ஜின் தான் வழங்கப்படும்.

மீண்டும் நெடுஞ்சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்!! வீடியோ இதோ...

நீண்ட தாழ்வான இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள், அகலமான டயர்கள், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் உடன் மீட்டியோர் 350 பைக்கை போன்று ரெட்ரோ ஸ்டைலில் பின்பக்க ஹெட்லைட் & டர்ன் இண்டிகேட்டர்கள் மட்டுமின்றி அந்த பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் புதிய 650சிசி க்ரூஸர் பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும்.

Most Read Articles

English summary
650cc Royal Enfield Cruiser Spied by Interceptor 650 Rider. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X