விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 53,298 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய 2021 மார்ச் மாதத்தில் 66,058 யூனிட் மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

இந்த வகையில் 19.32 சதவீத வளர்ச்சியை இந்த சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம் கண்டுள்ளது. மொத்த 53,298 விற்பனை எண்ணிக்கையில் 48,789 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

2021 மார்ச்சில் உள்நாட்டு விற்பனையில் 60 ஆயிரத்தை இந்த நிறுவனம் கடந்திருந்தது. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 5,885ல் (2021 மார்ச்) இருந்து 4,509 ஆக குறைந்துள்ளது. மொத்த விற்பனை எண்ணிக்கையில் 46,561 யூனிட்கள் 350சிசி மாடல்களாகும்.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

ராயல் என்பீல்டு 350சிசி மோட்டார்சைக்கிள்களாக கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. மீதி 6,737 யூனிட்கள் 350சிசி+ மோட்டார்சைக்கிள்களின் (ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650) மூலம் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை 2020 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது, ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அந்த மாதத்தில் வாகன விற்பனை முற்றிலுமாக தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் பல புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவை தொடர்ந்து தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

அவற்றில் 350சிசி பைக்குகள் மட்டுமில்லாமல் புதிய 650சிசி பைக்குகளும் அடங்குகின்றன. புதிய 650சிசி பைக் ஒன்றிற்கு சூட்டுவதற்காக ‘ஷூட்கன்' என்கிற பெயரை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்ததை கூட நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

விற்பனையில் சிறிய தடுமாற்றம் காணும் ராயல் என்பீல்டு!! கொரோனா 2வது அலை காரணமா?

புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் உடன் கொண்டுவரப்படும் புதிய 350சிசி பைக்கிற்கு ஹண்டர் 350 என பெயர் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் மீட்டியோர் 350-இன் என்ஜின் மற்றும் ப்ளாட்ஃபாரத்தை பெற்றுவரவுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield April sales 53298 units. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X