கானல் நீராகும் இளைஞர்களின் ராயல் என்பீல்டு கனவு!! கிளாசிக் & மீட்டியோர் 350-இன் விலை ரூ.2 லட்சத்தை கடந்தது!

ராயல் என்பீல்டு பைக்குகளின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை இந்த ஜூலை மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. அதனை விவரிக்கும் அட்டவணை இதோ...

Royal Enfield Classic 350

Latest Price Previous Price Premium
Single-channel ABS, Chestnut Red, Ash, Mercury Silver, Redditch Red, Pure Black ₹1,79,782 ₹1,72,466 ₹7,316
Dual-channel ABS, Classic Black, Pure Black & Mercury Silver ₹1,88,531 Pure Black & Mercury Silver: ₹1,80,877, Classic Black: ₹1,80,879 Pure Black & Mercury Silver: ₹7,654, Classic Black: ₹7,652
Dual-channel ABS, Gunmetal Grey ₹2,03,480 (Alloy)

₹1,90,555 (Spoke)

₹1,95,252 (Alloy)

₹1,82,825 (Spoke)

₹8,228 (Alloy)

₹7,730 (Spoke)

Dual-channel ABS, Signals edition (Airborne Blue & Stormrider Sand) ₹1,99,777 Airborne Blue: ₹1,91,693,

Stormrider Sand: ₹1,91,692

Airborne Blue: ₹8,084

Stormrider Sand: ₹8,085

Dual-channel ABS, Stealth Black & Chrome Black ₹2,06,962 ₹1,98,600 ₹8,362
Dual-Channel ABS, Orange Ember & Metallo Silver ₹2,03,480 ₹1,95,252 ₹8,228

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரதான விற்பனை மாடலாக விளங்கும் கிளாசிக் 350, சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் & ட்யுல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களிலும், பல்வேறு விதமான நிறத்தேர்வுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் விலைகள் ரூ.7.316-இல் இருந்து ரூ.8.362 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.72 லட்சத்தில் இருந்து ரூ.1.79 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் இதன் முந்தைய விலைகள் எதுவும் ரூ.2 லட்சத்தை தாண்டாமல் இருந்தன. ஆனால் தற்போது சில நிறங்களில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடனான கிளாசிக் 350-இன் விலைகள் ரூ.2 லட்சத்தை கடந்துள்ளன. இதற்கிடையில் புதிய தலைமுறை அப்கிரேடை கிளாசிக் 350 மாடல் விரைவில் பெறவுள்ளது.

இந்த அப்கிரேட்டினால் பைக்கின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான 350சிசி மோட்டார்சைக்கிளான புல்லட் 350 கிக்-ஸ்டார்ட் & செல்ஃப்-ஸ்டார்ட் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Bullet 350 Latest Price Old Price Increase
Bullet 350 KS Bullet Silver & Onyx Black: ₹1,58,485

Black: ₹1,65,754

Bullet Silver & Onyx Black: ₹1,53,718

Black: ₹1,60,775

₹4,767 - ₹4,979
Bullet 350 ES Jet Black, Regal Red &

Royal Blue: ₹1,82,190

Jet Black, Regal Red &

Royal Blue: ₹1,76,731

₹5,459

இதன் விலைகள் ரூ.4,767ல் இருந்து ரூ.5,459 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,58,485 ஆகவும், அதிகப்பட்ச விலை ரூ.1,82,190 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,92,109 ஆக உயர்ந்துள்ளது.

Meteor 350 New Price Old Price Difference
Fireball (Red, Yellow) ₹1,92,109 ₹1,84,319 ₹7,790
Stellar (Blue, Red, Black) ₹1,98,099 ₹1,90,079 ₹8,020
Supernova (Brown, Blue) ₹2,08,084 ₹1,99,679 ₹8,405

இது இந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய இருந்த வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபயர்பால், ஸ்டெல்லர், சூப்பர்நோவா என்ற 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் மீட்டியோரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.2 லட்சத்தை கடந்துள்ளது.

ராயல் என்பீல்டின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்படும் ஹிமாலயனின் விலைகள் அதன் நிறத்தேர்வை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வகையில் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் ஹிமாலயனை வாங்குவது மலிவானதாக விளங்குகிறது.

Himalayan New Price Old Price Difference
Granite Black, Pine Green ₹2,13,273 ₹2,08,657 ₹4,616
Mirage Silver, Gravel Grey ₹2,05,784 ₹2,01,314 ₹4,470
Lake Blue, Rock Red ₹2,09,529 ₹2,04,985 ₹4,544

இந்த நிறங்களில் ஹிமாலயனின் எக்ஸ்ஷோரூம் விலை முன்பு ரூ.2,04,985 ஆக இருந்தது. அது தற்போது ரூ.4,544 அதிகரிக்கப்பட்டு ரூ.2,09,529ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற நிறங்களில் ஹிமாலயனின் விலைகள் ரூ.4,616 மற்றும் ரூ.4,470 அதிகரிக்கப்பட்டுள்ளன.

Interceptor 650 New Price Old Price Difference
Mark 2 Chrome ₹3,03,620 ₹2,97,134 ₹6,486
Baker Express, Sunset Strip, Downtown Drag ₹2,89,805 ₹2,83,593 ₹6,212
Orange Crush, Ventura Blue, Canyon Red ₹2,81,518 ₹2,75,467 ₹6,051

இவற்றை தொடர்ந்து ராயல் என்பீல்டின் மிக பெரிய என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள்களான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 பைக்குகளின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன.

Continental GT650 New Price Old Price Difference
Mr. Clean ₹3,20,177 ₹3,13,368 ₹6,809
British Racing Green, Rocker Red ₹2,98,079 ₹2,91,700 ₹6,379
Dux Deluxe, Ventura Storm ₹3,06,368 ₹2,99,830 ₹6,538
Most Read Articles
English summary
Royal Enfield Models Price Hike Table Code. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X