ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

புதிய தலைமுறை கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் க்ரூஸர் 650 என அதிக எண்ணிக்கையில் புதிய மோட்டார்சைக்கிள்களை தற்சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

இதில் முதலாவதாக புதிய கிளாசிக் 350 இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து க்ரூஸர் 650 பைக்கின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம்.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

இவற்றிற்கு அடுத்தே ஹண்டர் 350 பைக் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய ஷோரூம்களை வந்தடையும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் புதிய கிளாசிக் 350 பைக்கும், ஹண்டர் 350 பைக்கும் ஒன்றாக சமீப காலமாக அதிகளவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

ஆனால் தற்போது சோதனை ஹண்டர் 350 பைக் ஹிமாலயனின் சோதனை மாடலுடன் திண்டிவனம்- மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் விகடன் செய்திதளம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படத்தை தான் கீழே காண்கிறீர்கள்.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

ராயல் என்பீல்டின் புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்ற ஹண்டர் 350 பைக்கின் இந்த சோதனை மாதிரி கச்சிதமாக, மெல்லியதாக பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

ஆனால் இதனை காட்டிலும் முதலில் நமது கண்ணில் படுவது அகலமான ஹேண்டில்பார் தான். மேலும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி வழக்கத்தை காட்டிலும் சற்று பின்னோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக இந்த சோதனை ஹண்டர் 350 பைக்கை ஓட்டுனர் ஓட்டி வரும்போது வித்தியாசமான பொசிஷனை கொண்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

மேலும் போட்டி பைக்குகளான ஹோண்டா சிபி350 மற்றும் சிபி350ஆர்எஸ் உடன் ஒப்பிடும்போது ஹண்டரின் ரைடிங் பொசிஷன் அவ்வளவு ஆக்ரோஷமானதாக இல்லை எனவும் விகடன் தெரிவித்துள்ளது. இந்த சோதனை பைக்கின் கருப்பு நிற அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

இவற்றுடன் சுற்றிலும் க்ரோம் உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், ஒற்றை துண்டாக இருக்கை, கருப்பு கெய்ட்டர் உடன் டெலெஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள், பின்பக்கத்தில் இரு ஷாக்குகள், பேஷ் தட்டு, வட்ட வடிவிலான டர்ன் சிக்னல்கள் & கண்ணாடிகள், பின் இருக்கை பயணிக்கான முதுகு தலையணை, எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் கருப்பு நிறத்தில் எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றையும் சோதனை ஹண்டர் 350 பைக்கில் பார்க்க முடிகிறது.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

ஜே ப்ளாட்ஃபாரத்தில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட பைக்காக மீட்டியோர் 350 கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மீட்டியோர் 350-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியை ஹண்டர் 350 பைக்கிலும் எதிர்பார்க்கலாம். இது கூகுளின் உதவியுடன் செயல்படக்கூடியது.

ஹிமாலயன் உடன் சோதனை ஓட்டத்தில் ராயல்என்பீல்டு ஹண்டர் 350!! ஹேண்டில்பார் நன்கு அகலமாக இருக்கு...

இதனுடன் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் ஹண்டர் 350 பெற்றுவரவுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஒஎச்சி ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Hunter 350 Spied With Wide Handlebar & Ribbed Seat.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X