ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

ராயல் என்பீல்டின் புதிய பைக்காக அறிமுகமாகவுள்ள ஹண்டர் 350-இன் மீட்டர் கன்சோலின் வடிவம் புதிய ஸ்பை வீடியோவின் மூலமாக வெளியாகியுள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

ராயல் என்பீல்டு அதன் வருங்கால மோட்டார்சைக்கிள்களை தொடர்ச்சியாக சோதனைகளில் உட்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது ராயல் என்பீல்டின் இரு 350சிசி பைக்குகள் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஸ்பை வீடியோ க்ராஷோல்ட் விலாக்ஸ் என்ற யுடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 பைக்கின் என்ஜின் மற்றும் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

Image Courtesy: Grasholt Vlogs

இந்த இரு 350சிசி பைக்குகளில் ஒன்று புதிய தலைமுறை கிளாசிக் 350. மற்றொன்று ஹண்டர் 350 ஆகும். ஹண்டர் என்ற பெயரை இதுவரையில் ராயல் என்பீல்டு நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

இந்த நிலையில் ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்படவுள்ள மீட்டர் கன்சோலை தற்போது கிடைத்துள்ள ஸ்பை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதன் மைய கன்சோலில் ட்ரிப்பர் நாவிகேஷனுக்கான பகுதி உள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

இதன் மூலம் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஒவ்வொரு திருப்பத்திற்குமான நாவிகேஷன் சிஸ்டம் ஹண்டர் 350 பைக்கிலும் கொண்டுவரப்படவுள்ளதை அறிய முடிகிறது. இந்த வசதி மீட்டியோரை தொடர்ந்து புதிய தலைமுறை ஹிமாலயனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

டிஜிட்டல் திரை உடன் பெரிய அளவிலான அனலாக் வேகமானி உள்ளது. இதில் டிஜிட்டல் திரையின் மூலம் எரிபொருள் அளவு, ஓடோ, பயணம் செய்யப்பட்ட தூரம் உள்ளிட்டவற்றை ஓட்டுனர் அறியலாம்.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

ஹண்டர் 350 & புதிய தலைமுறை கிளாசிக் 350 என்ற இரு பைக்குகளும் இந்த வீடியோவில் கருப்பு நிற பெயிண்ட் உடன் காட்சியளிக்கின்றன. பெட்ரோல் டேங்கின் டிசைனை மறைப்பதற்காகவே இப்படியொரு நிறத்தில் இவை பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

சோதனை ஹண்டர் 350 பைக்கில் நீளமான எக்ஸாஸ்ட் அமைப்பு, அகலமான ஹேண்டில்பார் மற்றும் பருமனான டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பார்க்கும்போது ஹண்டர் 350 ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டு வருவது தெளிவாகிறது.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

ஏற்கனவே கூறியதுபோல் மீட்டியோரை போன்று ஜே-ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் ஹண்டர் 350 பைக்கிலும் மீட்டியோர் 350-இல் வழங்கப்படும் அதே 349சிசி என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி!! புதிய ஸ்பை வீடியோ வெளியீடு!

அதிகப்பட்சமாக 22 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் அமைப்பில் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் மிக சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்படும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350-இன் விலை ரூ.1.80 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Hunter 350's meter console spied. Gets Tripper navigation dial.
Story first published: Thursday, April 15, 2021, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X