நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வந்தநிலையில் Royal Enfield நிறுவனம் புதிய தலைமுறை Classic 350 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இப்பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடல்களில் Royal Enfield நிறுவனத்தின் Classic 350 பைக் மாடலும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பைக்கையே தற்போது இருசக்கர வாகன உற்பத்தியாளர் புதிய தலைமுறை இருசக்கர வாகனமாக புதுப்பித்திருக்கின்றார்.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இப்புதுப்பிக்கப்பட்ட கிளாசிக் 350 பைக்கையே நிறுவனம் இந்தியாவில் இன்று விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இப்பைக்கின் வருகையை மிக நீண்ட நாட்களாக இந்தியர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று பைக்கின் அறிமுகம் அரங்கேறியிருக்கின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிகழ்வு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்புதிய தலைறை கிளாசிக் 350 பைக்கில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த புதுப்பித்தல் கிளாசிக் 350 பைக்கின் பாரம்பரிய தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யும் வகையில் அமையவில்லை.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பெரும்பாலானோர் இந்த பைக்கின் ரெட்ரோ க்ரூஸர் தோற்றத்திற்கே அடிமையாக இருக்கின்றனர். இத்தகைய தோற்றத்தை மாற்ற நிறுவனமும் விரும்பவில்லை என தெரிகின்றது. எனவேதான் பழமை மாறா தோற்றத்தில் புதுப்பித்தலை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தற்போது பெற்றிருக்கின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அதேவேலையில், தனது போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையிலான பல்வேறு சிறப்பு வசதிகளை இப்பைக்கில் தயாரிப்பாளர் சேர்த்திருக்கின்றார். நிறுவனம் மிக சமீபத்தில் மீட்டியோர் 350 எனும் அட்டகாசமான இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக்கை தயாரிக்க பயன்படுத்தப்படும் 'J' பிளாட்பாரத்தை பயன்படுத்தியே புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், மீட்டியோர் 350 பைக்கில் இடம் பெற்றிருப்பதைப் போல நவீன கால அம்சங்கள் பல புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கிலும் இடம் பெற்றிருக்கின்றன.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

சிறப்பம்சங்கள்:

திருப்பத்திற்கு திருப்பம் வழிகுறித்த தகவலை வழங்கக் கூடிய நேவிகேஷன் சிஸ்டம், பைலட் லேம்புகள் கொண்ட முகப்பு மின் விளக்கு, புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்யூவல் காஜ் மற்றும் எல்சிடி இன்ஃபர்மேஷன் பேனல் உள்ளிட்ட அம்ச்ங்களை புதிய கிளாசிக் 350 பைக் பெற்றிருக்கின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், புதிய ஸ்டைலிலான வால் பகுதி மின் விளக்கு, அப்டேட் செய்யப்பட்ட புகை வெளியேற்றும் குழாய், 13 லிட்டர் கொள்ளளவு வசதிக் கொண்ட எரிபொருள் நிரப்பும் தொட்டி, அதிக சொகுசான பயணத்தை அனுபவத்தை வழங்கும் இருக்கைகள் உள்ளிட்டவையும் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

புதிய அப்டேட்டுகள்:

மோட்டார்சைக்கிளில் புதிய அப்டேட்டுகளாக 19 இன்சிலான வீல் முன்பக்கத்திலும், 18 அங்குல வீல் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் ட்யூப்கள் அல்லாத டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வீல் பல ஸ்போக்குகள் கொண்ட சக்கரம் ஆகும். இத்துடன் அலாய் வீல் சக்கரம் தேர்வு வழங்கப்படுகின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக் டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் டிஸ்க் வேரியண்டில் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 300 மிமீ டிஸ்க் முன் பக்க வீலிலும், 270 மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றன. டிரம் வேரியண்டில் பின் பக்க வீலில் 153 மிமீ அளவு டிரம் பிரேக் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன் இரட்டை மற்றும் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதியும் இப்பைக்கில் வழங்கப்படுகின்றது. சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன்பக்க வீலில் 41மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 6 படி நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடியி ட்வின்-ட்யூப் எமல்ஷன் ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து பைக்கில் பயணிப்பதை மிகவும் உற்சாகமானதாகவும், அலாதியானதாகவும் மாற்ற உதவுகின்றன.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

எஞ்ஜின்:

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு பைக்கில் 349 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இவையிரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியற்றுகின்றன.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

நிற தேர்வுகள்:

புதிய கிளாசிக் 350 பைக் ஒட்டுமொத்தமாக 11 புதிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். Chrome Red, Chrome Bronze, Dark Stealth Black, Dark Gunmetal Grey, Signals Marsh Grey, Signals Sandstorm, Halcyon Green, Halcyon Black, Halcyon Grey, Redditch Green மற்றும் Redditch Grey ஆகிய நிற தேர்வுகளிலேயே புதிய தலைமுறை கிளாசிக் 350 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதில் முதல் ஒன்பது நிற தேர்வுகள் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். கடைசி இரண்டு நிற தேர்வுகள் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வேரியண்டிற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பன்முக நிற தேர்வு அதன் வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

விலை:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகமாகியிருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை நிறுவனம் நியாயமான விலையை நிர்ணயித்திருப்ப்தாக கூறப்படுகின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 1.84 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாம எதிர்பார்த்த புதிய தலைமுறை Classic 350 பைக் விற்பனைக்கு அறிமுகமாயிருச்சு... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதேபோல் இதன் உயர் நிலை மாடலுக்கு 2.15 லட்ச ரூபா என்ற அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய கிளாசிக் 350 பைக் ஹோண்டாவின் ஹைனெஸ் சிபி350, பெனல்லி இம்பீரியல் மற்றும் ஜாவா நிறுவனத்தின் தயாரிப்புகள் போன்றவற்றிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

முழு விலை விபரப் பட்டியல்:

2021 Royal Enfield Classic 350 Price
Redditch ₹1,84,374
Halcyon ₹1,93,123
Signals ₹2,04,367
Dark ₹2,11,465
Chrome ₹2,15,118

More from DriveSpark

Article Published On: Wednesday, September 1, 2021, 12:48 [IST]
English summary
Royal enfield launched 2021 classic 350 bike in india at rs 1 84 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+