எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

இந்தியாவில் வாகனங்கள் விற்பனை தற்போது 'டல்' அடித்து கொண்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. இதில், ராயல் என்பீல்டு நிறுவனமும் ஒன்று. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நிறைய பைக்குகள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆனால் ஒரே ஒரு பைக் மட்டும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

இது ஹிமாலயன் ஆகும். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது. இந்த பைக் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

எனவே இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7,851 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதேபோல், மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,184 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதன்பின் வந்த அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 7,851 ஆக உயர்ந்துள்ளது. இது 26.96 சதவீத வளர்ச்சியாகும். இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

குறிப்பாக இந்தியாவில் வாகனங்கள் விற்பனை மிகவும் மந்தமாக உள்ள நிலையில் இது சிறப்பான வளர்ச்சிதான். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில், 349 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக், ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா என மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ட்ரிப்பர் நேவிகேஷன் உள்பட வாடிக்கையாளர்களுக்கு தேவையான முக்கிய வசதிகள் பல வழங்கப்பட்டுள்ளன.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

மேலும் ட்யூப்லெஸ் டயர்கள், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் (முன் பகுதியில் 300 மிமீ, பின் பகுதியில் 270 மிமீ), ட்யூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் என இன்னும் பல்வேறு வசதிகளை ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பெற்றுள்ளது. அத்துடன் மீட்டியோர் 350 பைக்கிற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் ஏராளமான ஆக்ஸஸெரீஸ்களையும் வழங்கி வருகிறது.

எப்டிதான் பெட்ரோல் அடிக்கறாங்களோ? ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விற்பனை சும்மா பிச்சு ஒதறுது!

தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு நேரடி போட்டி என எந்த பைக்கும் இல்லை. எனினும் ஜாவா, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கும் இதற்கு மிகச்சிறந்த மாற்று தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 29, 2021, 22:32 [IST]
English summary
Royal enfield meteor 350 october 2021 sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+