இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

ஒவ்வொரு பைக் விற்பனை செய்யப்படும்போதும், Royal Enfield நிறுவனம் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த Royal Enfield நிறுவனத்தின் இத்தாலி பிரிவும், Treedom அமைப்பும் தற்போது கூட்டணி சேர்ந்துள்ளன. இதன்படி இத்தாலியில் ஒவ்வொரு Royal Enfield மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படும்போதும் ஒரு மரக்கன்று நடப்பபடும். இந்த திட்டத்தின் கீழ் இத்தாலியில் ஏற்கனவே 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

வரும் காலங்களில் இன்னும் அதிகமாக மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. Royal Enfield மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும். தங்களது பெயரில் என்ன மரக்கன்று நடப்பட வேண்டும்? என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

இதன்படி Avocado மரக்கன்றுகள், Oak மரக்கன்றுகள் என பல்வேறு வகையான மரக்கன்றுகளை தேர்வு செய்ய முடியும். இந்த மரக்கன்றுகளை சரியாக வளர்க்கும் பணியில், இத்தாலியை சேர்ந்த உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து, Treedom அமைப்பு ஈடுபடும். தங்கள் பெயரில் நடப்பட்ட மரக்கன்றுகளின் நிலை என்ன? எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது? என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

அதே சமயம் இந்த மரங்களால் கிடைக்கும் பயன்கள், அந்த மரத்தை பராமரித்து வரும் விவசாயிக்கு முழுமையாக வழங்கப்படும். எனவே இத்தாலியை சேர்ந்த விவசாயிகளுக்கும் இந்த திட்டம் பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த திட்டம் தற்போதைய நிலையில் இத்தாலியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

வரும் காலங்களில் ஜெர்மனியிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும். இதற்கிடையே இந்தியாவை பொறுத்தவரையில், Royal Enfield நிறுவனம் புதிய தலைமுறை Classic 350 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

Royal Enfield நிறுவனத்தின் Classic 350 மோட்டார்சைக்கிள், 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகி வரும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகும். ஆனால் Honda Hness CB350 போன்ற மாடல்களின் வருகை, Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளுக்கு சற்றே போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

எனவே Classic 350 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் Royal Enfield நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை Royal Enfield Classic 350 இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் அல்ல! ஒரு பைக் விற்பனை செய்யப்பட்டால் ஒரு மரக்கன்றை நடும் Royal Enfield... எந்த நாட்டில் தெரியுமா?

இந்த தகவலை Royal Enfield நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Classic 350 மோட்டார்சைக்கிளின் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் Royal Enfield நிறுவனம் பெரிய அப்டேட்களை செய்துள்ளது. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை மாடலின் விலை அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

Most Read Articles

English summary
Royal enfield plants a tree for every bike sold in italy check details here
Story first published: Monday, August 23, 2021, 8:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X