ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரமே இத்தன எண்ணிக்கையா!

ராயல் என்பீல்டு ( Royal Enfield) நிறுவனத்தின் புதியதலைமுறை கிளாசிக் 350 (Classic 350) உற்பத்தியில் புதிய எண்ணிக்கையைத் தொட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

தமிழகத்தின் தலைநகர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ராயல் என்பீல்டு. இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக கிளாசிக் 350 இருக்கின்றது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனை ராயல் என்பீல்டு கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

பெரிதும் எதிர்பார்ப்பு இப்பைக்கிற்கு நிலவி வந்த நிலையில் ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தலைமுறை வெர்ஷனே தற்போது உற்பத்தியில் புதிய மைல் கல் சாதனையைப் படைத்திருக்கின்றது. ஒரு லட்சம் யூனிட் விற்பனை சாதனையை அது படைத்திருக்கின்றது. இதன் அறிமுகம் அரங்கேறி முழுமையாக மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் இந்த 350சிசி பைக் ஒரு லட்சம் யூனிட் உற்பத்தியை தொட்டிருக்கின்றது.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

இந்த நிலை புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பா, தெற்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றிலும் புதிய தலைமுறை கிளாசிக் 350 விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

இந்த நாடுகளிலும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதாக உறுதியாகியுள்ளது. இத்தகைய உற்பத்தியை நிறுவனம் மேற்கொண்டு தற்போதும் இரண்டு மாதங்கள் காத்திருப்பு காலம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கிற்கு நிலவுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350பைக்கை அதன் ஜே1ஏ பிளாட்பாரத்தை பயன்படுத்தி கட்டமைத்து வருகின்றது.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

இந்த பிளாட்பாரமே கிளாசிக் 350 பைக்கை மாடர்ன் கால மோட்டார்சைக்கிளாக மாற்ற உதவி செய்திருக்கின்றது. அதாவது, முந்தைய வெர்ஷன் கிளாசிக் 350ஐ காட்டிலும் கூடுதல் கவர்ச்சி மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட பைக்காக உருவாக்கியிருக்கின்றது. இப்பைக் நீண்டு நெடுந் தூர பயணம், நகர்புற பயணம் மற்றும் தினசரி பயன்பாடு என அனைத்திற்கும் உகந்த வாகனமாக இருக்கின்றது.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

இதன் விளைவாகவே பல மடங்கு நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இப்பைக்கிற்கு டிமாண்ட் நிலவ தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாக மிக குறுகிய கால கட்டத்தில் இந்த பைக் ஒரு லட்சம் யூனிட் விற்பனை எனும் சாதனையைப் படைத்திருக்கின்றது. புதிய தலைமுறை கிளாசிக் 350இல் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், பைலட் லேம்புகள் கொண்ட முகப்பு பகுதி மின் விளக்கு, புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்யூவல் கேஜ் மற்றும் எல்சிடி தகவல் பேனல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

மேலும், செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், புதிய ஸ்டைலான வால் பகுதி மின் விளக்கு, அப்டேட் செய்யப்பட்ட புகை வெளியேற்றும் குழாய், 13 லிட்டர் கொள்ளளவு வசதிக் கொண்ட எரிபொருள் தொட்டியும் புதிய தலைமுறையில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய 350 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 எச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

ஒரு லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை தொட்ட புதிய தலைமுறை Royal Enfield Classic 350... அடேயப்பா இவ்ளோ சீக்கிரத்திலேயே இத்தன எண்ணிக்கையா!

புதிய கிளாசிக் 350 ஒட்டுமொத்தமாக 11 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். குரோம் சிவிப்பு (Chrome Red), குரோம் ப்ரோன்ஸே (Chrome Bronze), டார்க் ஸ்டீல்த் கருப்பு (Dark Stealth Black), டார்க் கன்மெட்டல் கிரே (Dark Gunmetal Grey), சிக்னல்ஸ் மார்ஷ் கிரே (Signals Marsh Grey), சிக்னல்ஸ் சேன்ட்ஸ்டோர்ம் )Signals Sandstorm), ஹால்சையோன் கிரான் (Halcyon Green), ஹால்சையோன் கருப்பு (Halcyon Black), ஹால்சையோன் கிரே (Halcyon Grey), ரெட்டிட்ச் பச்சை (Redditch Green) மற்றும் ரெட்டிட்ச் கிரே (Redditch Grey) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 15, 2021, 18:50 [IST]
English summary
Royal enfield rolled out 100000 new gen classic 350 motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+