ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

கடந்த 2021 மே மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

கடந்த மே மாதமும் சரி, 2020 மே மாதமும் சரி கொரோனா வைரஸ் பரவலினால் ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனை பெரிய சரிவை கண்டுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு மே மாதத்தில் நாடு தழுவிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்தது.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

ஆனால் கடந்த மே மாதத்தில் அவ்வாறான ஊரடங்கு இல்லாவிடினும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்தன, இப்போதும் தமிழ்நாட்டில் உள்ளன. இவ்வாறான ஊரடங்குகளுக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

ராயல் என்பீல்டு நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்ட் கடந்த மே மாதத்தில் மொத்தம் 27,294 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020 மே மாதத்தில் 19,113 யூனிட் மோட்டார்சைக்கிள்களையே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!
Royal Enfield May-21 May-20 Growth (%)
<350cc 22,734 17,543 29.59
>350cc 4,560 1,570 190.45
Domestic 20,073 18,429 8.92
Exports 7,221 684 955.70
Total 27,294 19,133 42.80

Source: Rushlane

ஆனால் இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்தில் 48,789 ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 27,294 என்ற 2021 மே மாத விற்பனை எண்ணிக்கையில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என்ற இரண்டும் அடங்குகின்றன.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

அதாவது 20,073 மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையிலும், 7,221 மோட்டார்சைக்கிள்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. 2020 மே மாதத்திலும் உள்நாட்டு விற்பனை கிட்டத்தட்ட இந்த அளவில் தான் இருந்தது என்றாலும், வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்திருந்தது.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

எந்த அளவிற்கு என்றால், ஊரடங்கு உத்தரவுகளினால் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 684 மோட்டார்சைக்கிள்களையே ராயல் என்பீல்டு நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அதேபோல் 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விற்பனை 58.86 சதவீதம் குறைந்திருந்தாலும், ஏற்றுமதி 60.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

இந்த ஒரு விஷயத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருக்கும். மொத்த விற்பனையில் வழக்கம்போல் ராயல் என்பீல்டின் 350சிசி மோட்டார்சைக்கிள்களே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் 22,734 ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

மொத்த விற்பனையில் இவையே 80 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. இதில் இருந்து ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அதன் 350சிசி மோட்டார்சைக்கிள்கள் எந்த அளவிற்கு முக்கியமானவை என்பது இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ராயல் என்பீல்டின் 350சிசி மாடல்களாக கிளாசிக், சமீபத்திய அறிமுகமான மீட்டியோர், புல்லட் மற்றும் எலக்ட்ரா உள்ளன.

ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் ராயல் என்பீல்டு!! உள்நாட்டு விற்பனை மீண்டும் வெகுவாக குறைந்தது!

350சிசி+ ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை வழக்கம்போல் குறைவாகவே இருந்துள்ளது. இதில் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் அடங்குகின்றன. இவற்றை பெரும்பாலும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவே ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கிறது.

Most Read Articles

English summary
Royal Enfield Sales May 2021 – Classic, Bullet, Meteor, Himalayan, 650 Twins.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X