தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

வருட இறுதி பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் இந்தியாவில் வழக்கம்போல் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரங்கள் சாட்சியாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 12,71,455 டூ=வீலர்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

2021 ஜூலை மாதத்திலும் நம் நாட்டில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 12 லட்சத்தை கடந்திருந்தது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 14.91 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்த இருசக்கர வாகன விற்பனை சுமார் 14.94 லட்சமாக இருந்தது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

இதில் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கே அதிகமாகும். கொரோனா இரண்டாவது அலையால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மற்ற நிறுவனங்களை போல சற்று சரிவை சந்திருந்த போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,31,137 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

ஆனால் 2020 ஆகஸ்ட் மாதத்தில் 5,68,674 யூனிட் இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் வாகன விற்பனையில் 2020 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 24.19 சதவீத வீழ்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதத்தில் கண்டுள்ளது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

ஆனால் இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் 0.45% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ இருசக்கர வாகனங்களின் பங்கு கிட்டத்தட்ட 33.91% ஆகும். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

இந்த ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4,01,469 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டாவின் விற்பனையும் 2020 ஆகஸ்ட்டை காட்டிலும் சற்று குறைந்துள்ளது. மிகவும் குறைவு இல்லை, 6.25% மட்டுமே. அதேபோல் 2021 ஜூலை மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

மூன்றாவது இடத்தில் 1,79,999 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்ளது. ஆனால் 2020 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் 2 லட்சத்தை கடந்திருந்த டிவிஎஸ் நிறுவனம் முந்தைய 2021 ஜூலை மாதத்திலும் 1.75 லட்சம் என்ற அளவில் தான் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

இதனை சரிச்செய்ய டிவிஎஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது என நம்புகிறோம். டிவிஎஸ் மோட்டாரில் இருந்து சமீபத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் போன்றதான நிலையில் தான் புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் உள்ளது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

2020 ஆகஸ்ட் மாதத்தில் 1.78 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த பஜாஜ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும், அதற்கு முந்தைய ஜூலை மாதத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 1.57 லட்ச இருசக்கர வாகனங்களையே விற்பனை செய்துள்ளது. சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தவிர்த்து வேறெந்த ஸ்கூட்டரும் பஜாஜ் பிராண்டில் விற்பனையில் இல்லை.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களையே கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மலைப்போல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நம்பி உள்ளது. முதல் நான்கு இடங்களில் உள்ள இவை தான் விற்பனையில் 1 லட்சத்தை கடந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களாகும். ஐந்தாவது இடத்தில் உள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் 61,809 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

தற்சமயம் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் டாப் பிராண்ட்கள்!! 2021 ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம்

இந்த லிஸ்ட்டில் வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும், மாதம்-மாதம் ஒப்பீடுகையிலும் வளர்ச்சியை கண்டுள்ள ஒரே நிறுவனம் சுஸுகி மோட்டார்சைக்கிள் மட்டும்தான். ஆறாவது இடத்தில் நமது சென்னையை பூர்விகமாக கொண்ட ராயல் என்பீல்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 39,070 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 5, 2021, 12:30 [IST]
English summary
Two-Wheelers Sales 2021 August, Hero Motocorp Lead The List.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+