வேட்டையாட தயாரா?.. 230 கிமீ ரேஞ்ஜ் வழங்கும் மின்சார ஸ்கூட்டரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது!!

230கிமீ ரேஞ்ஜ் மற்றும் 103 கிமீ உச்சபட்ச வேகம் ஆகிய நம்ப முடியாத திறன்களுடன் உருவாகியிருக்கும் மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியானது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி. இது ஓர் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். குறைந்த முதலீட்டில் மின்வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. எனவேதான் இதனை ஸ்டார்ட்-அப் (ஆரம்பநிலை) வாகன உற்பத்தி நிறுவனம் என்றழைக்கின்றனர்.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

இதனால், இந்த வாகனத்தின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த மின் வாகன ஆர்வலர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு ஆளாகியுள்ளனர். காரணம், இந்த மின்சார ஸ்கூட்டர் நம்ப முடியாத அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

மிக முக்கியமாக மார்க் 2 மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 240 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதுவே பலரைக் கவரக் கூடிய தகவலாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. எனவேதான் மின் வாகன ஆர்வலர்கள் மட்டுமின்றி பயணங்களை அதிகம் விரும்பும் மக்கள் மத்தியில் இந்த மார்க்2 மின்சார ஸ்கூட்டர் பெரும் ஆவலைத் தூண்டி வருகின்றது.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

ரூ. 1.1 லட்சம் முதல் ரூ.1.2 லட்சம் வரையிலான விலையில் சிம்பிள் எனெர்ஜி மார்க்2 மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறனைக் கொண்டது.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

இதில், 4.8 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்த இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து ஈகோ மோடில் வைத்து இயக்கும்போதே நம்மால் 240கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

இந்நிலையிலேயே சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அதன் மார்க் 2 மின்சார ஸ்கூட்டர் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகையால், அனைவரும் இந்த தேதியை எதிர்நோக்கி காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர். மின்சார ஸ்கூட்டரின் அறிமுகத்தை முன்னிட்டு பெங்களூரு நகர்புற பகுதியில் சார்ஜிங் மையங்களைக் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... மார்க்2 மின்சார ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியீடு... மின்வாகன பிரியர்களே வேட்டையாட தயாரா இருங்க!!

சிறப்பம்சங்கள்:

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இணைப்பு தொழில்நுட்ப வசதியுடன் மார்க்2 விற்பனைக்கு வர இருக்கின்றது. இத்துடன் ஜிபிஎஸ், செல்போன் சார்ஜிங் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் போன்றவையும் மார்க்2-வில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Simple Energy Released Most Awaited Mark 2 Electric Scooter Launch Details. Read In Tamil.
Story first published: Saturday, May 15, 2021, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X