ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்! எப்போதில் இருந்து புக்கிங் ஆரம்பிக்குது?

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எப்போது புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகக் கடுமையான போட்டியளிக்கும் வகையில் நாட்டிலேயே தயாராகி வருகின்றது சிம்பிள் நிறுவனத்தின் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் சிம்பிள் நிறுவனம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான ஓசூரில் ஆலை அமைத்து உருவாக்கி வருகின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

இங்கிருந்தே நாட்டின் 13 மாநிலங்களுக்கு விற்பனைக்கு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. இது ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம். ஆகையால், முதல் கட்டமாக சென்னை உட்பட நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் மட்டுமே தனது முதல் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் அதாவது இரண்டாம் கட்டமாக நாட்டின் அடுத்த மாநிலங்களில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க சிம்பிள் திட்டமிட்டுள்ளது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

இத்திட்டத்தைத் தொடர்ந்து தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் மக்களைக் கவரும் முயற்சியில் சிம்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் அண்மையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த மிக முக்கியமான தகவலை நிறுவனம் வெளியிட்டது. அதாவது, சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் ஒரு நிமிஷம் சார்ஜ் செய்தால் 2.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்ற ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

இவ்வாறு தொடர்ச்சியாக தனது தயாரிப்பு குறித்த வியத்தகு அம்சங்கள் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக, எப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் தொடங்கும், எவ்வளவு முன் தொகை என்பது பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்றே நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அன்றைய தினத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கையும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் மாலை 5 மணியளவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், நீண்ட நாட்களாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இத்தகவல் ஓர் வரப்பிரசாதமாக மாறியிருக்கின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்வென்றால், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக இருக்கும் அன்றைய தினத்திலேயே ஓலா நிறுவனமும் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் புக்கிங்கை நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ரூ. 499 என்ற முன் தொகையில் மின்சார வாகனத்திற்கான புக்கிங் நடை பெற்று வருகின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஒரு லட்சம் யூனிட்டுகளுக்கான முன்பதிவுகள் கிடைத்த்து குறிப்பிடத்தகுந்தது. இதே மாதிரியான அமோக வரவேற்பே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், மிக அதிக சிறப்பு வசதிகளுடன் நாட்டிலேயே உருவாகி வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது என்பது ஆகும்.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1,947 என்ற முன் தொகையில் முன் பதிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது ரீ-ஃபண்டபிள் (refundable) தொகை என நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதாவது, இருசக்கர வாகனத்தை வாங்கும் எண்ணம் பின் வாங்கப்பட்டால் முன்தொகையாக செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த தொகையும் (ரூ. 1,947) முழுவதுமாக வழங்கப்படும்.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என தெரிய வந்திருக்கின்றது. ஆனால், விலைகுறித்த தகவலை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுபோன்ற முக்கிய தகவலை ஆகஸ்டு 15ம் தேதி நிறுவனம் வெளியிட இருக்கின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற இருக்கின்றது. இது ஓர் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரியாகும். ஆகையால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பேட்டரி சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100கிமீ வேகம் ஆகும்.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. இத்தகைய அதிக சிறப்பு மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே சிம்பிள் ஒன் உருவாகியிருக்கின்றது. ஆகையால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகக் கடுமையான போட்டியை இது ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 1,947 இருந்தா சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்... எப்போ இருந்து புக்கிங் ஆரம்பிக்குது தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக ரேஞ்ஜ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மட்டும் தயாராகவில்லை. இதில் எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளும் இடம் பெற இருக்கின்றன. அந்தவகையில், தொடுதிரை, நேவிகேஷன்,ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களையும் சிம்பிள் ஒன் பெற இருக்கின்றது.

Most Read Articles

English summary
Simple one e scooter pre booking starts on 15th august at rs 1947
Story first published: Thursday, August 12, 2021, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X