2 விலை குறைந்த ஒடைசி மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்

இரு விலை குறைந்த மின்சார ஸ்கூட்டர்களை ஒடைசி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் பற்றிய சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

ஒடைசி நிறுவனம் அதன் இரு புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவையிரண்டுமே குறைந்த வேக மின்சார ஸ்கூட்டர்களாகும். இ2கோ எனும் பிராண்ட் பெயரிலேயே இரு ஸ்கூட்டர்களையும் ஒடைசி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

லித்தியம் அயன் பேட்டரி மற்றும் லீட்-ஆசிட் என இருவிதமான பேட்டரி தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஒடைசி அறிவித்திருக்கின்றது. ஒடைசி ஆரம்பநிலை மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் என்பது குறிபிடத்தகுந்தது. இதுவே இந்த பிரம்மிக்க வைக்கும் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இதில், குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராக இ2கோ லைட் மாடல் இருக்கின்றது. இதற்கு ரூ. 52.999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சற்று விலையுயர்ந்த மாடலகவே இ2கோ இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை ரூ. 63,999 ஆகும். இவையிரண்டுமே எக்ஸ்-ஷோரும் விலையாகும்.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இரு ஸ்கூட்டர்களுக்கும் இடையே பெரியளவில் வித்தியாசம் தென்படவில்லை. உருவத்தில் மட்டுமே இந்த நிலை நீடிக்கின்றது. சிறப்பம் மற்றும் சிறப்பு வசதிகளில் பெரியளவில் வித்தியாசங்களின்இந்த இருசக்கர வாகனங்கள் காட்சியளிக்கின்றன. எனவேதான் விலையிலும் பெரியளவு வித்தியாசத்தை இரு மின்சார ஸ்கூட்டர்களும் கொண்டிருக்கின்றன.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இ2கோ மின்சார ஸ்கூட்டரில் 250வாட், 60வோல்ட் பிஎல்டிசி மின்மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்டது. இதிலேயே இருவிதமான பேட்டரி தேர்வு வழங்கப்படுகின்றது.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

1.26 KWH லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 28AH லீட்-ஆசிட் பேட்டரி ஆகிய இரு தேர்வுகளில் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ஆன்டி தெஃப்ட் சிஸ்டத்தையும் சிறப்பு வசதியையும் ஒடைசி இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்குகின்றது. இது திருட்டு பயத்தைத் தவிர்க்க உதவும்.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மிகக் குறைந்த வேகத்தைக் கொண்டிருப்பதால் இந்த இருசக்கர வாகனத்தை இயக்க பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இதனை இயக்க ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இதனால்தான் இந்த புதுமுக மின்சார இருசக்கர வாகனங்கல் சிறப்பு வாய்ந்த அறிமுகமாக பார்க்கப்படுகின்றது. இந்த பார்க்வைக்கு இதன் ரேஞ்ஜ் திறனும் ஓர் காரணமாகும். ஆமாங்க இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் முழுமையாக 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இரு விலை குறைந்த ஒடைசிமின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்!

இவற்றுடன் சிறப்பு வசதிகளாக ரிவர்ஸ் கியர், மூன்று டிரைவிங் மோட்கள், எல்இடி ஸ்பீடோ மீட்டர், ஆன்டி தெஃப்ட் மோட்டார் லாக்கிங் வசதி, கீலெஸ் என்ட்ரீ மற்ரும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர டெலிஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க் முன்பக்கத்திலும், ட்யூவல் ஸ்பிரிங் ஹைட்ராலிக் அப்சார்பர் பின்பக்கத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பு: முதல் இரு படங்களை தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Startup EV Maker Odysse Electric Launches E2Go & E2Go Lite Low-Speed Scooter In India. Read In Tamil.
Story first published: Wednesday, January 13, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X