பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி வாங்க வேண்டும்? என்ற தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை ஒரு வழியாக இன்று (செப்டம்பர் 15) தொடங்கியது. கடந்த வாரமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்ட காரணத்தால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடங்கும் தேதியை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தள்ளி வைத்தது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்கள் தற்போது அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு முன்பணம் செலுத்த வேண்டும். எந்த வேரியண்ட்? எந்த வண்ணம்? போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடங்கியுள்ளதால், அதனை முன்பதிவு செய்திருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 (Ola S1) என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) என மொத்தம் 2 வேரியண்ட்களில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எஸ்1 வேரியண்ட்டின் விலை 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

அதே சமயம் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை 1,29,999 ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒன்றிய அரசின் ஃபேம்-2 மானியம் அடங்கி விடும். ஆனால் மாநில அரசுகள் வழங்கும் மானியம் அடங்காது. எனவே மாநில அரசுகள் மானியம் வழங்கினால், இந்த விலை இன்னும் குறையும்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

எந்தெந்த மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? என்பதை பொறுத்து, மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறுபடும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவை நிறைவு செய்து, எப்படி அதனை வாங்க வேண்டும்? என்பதற்கான வழிகாட்டுதல்களை பின்வரும் ஸ்லைடர்களில் தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

1. நீங்கள் ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொகையை செலுத்தியிருந்தால், செல்போன் எண்ணை பயன்படுத்தி, ஓலா எலெக்ட்ரிக் இணையதளத்தில் லாக்-இன் செய்யலாம். அத்துடன் நீங்கள் எந்த வேரியண்ட்டை வாங்க விரும்புகிறீர்கள்? என்பதையும் தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் இன்னும் முன்பதிவு செய்யவில்லை என்றால், அதற்கும் வழி உள்ளது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

499 ரூபாய் செலுத்தி, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். என்ன வேரியண்ட்? என்பதை தேர்வு செய்த முடித்தபின்னர், அதற்கு அடுத்தபடியாக நீங்கள் வண்ண தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 10 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

2. அதற்கு அடுத்தபடியாக 'பேமெண்ட் டேப்' (Payment Tab) வரும். நீங்கள் தேர்வு செய்துள்ள வேரியண்ட்டை பொறுத்து, எஞ்சிய தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாத தவணையிலும் நீங்கள் வாங்க முடியும். மாத தவணையானது ஒரு மாதத்திற்கு 2,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

இது எஸ்1 வேரியண்ட்டிற்கான மாத தவணையாகும். அதே நேரத்தில் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டிற்கான மாத தவணை 3,199 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. புத்தம் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு, முழு தொகையையும் முன்னரே செலுத்த முடியாதவர்களுக்கு, இந்த மாத தவணை திட்டம் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

3. வாடிக்கையாளர்களுக்காக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாடா கேப்பிடல் போன்ற நிறுவனங்களுடன், ஓலா ஃபைனான்ஸியல் சர்வீஸஸ் கூட்டணி வைத்துள்ளது. தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு விரைவாக லோன் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

ஒரு வேளை உங்களுக்கு கடன் உதவி தேவையில்லை என்றால், 20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை ஷிப்மெண்ட்டிற்கு (Shipment) முன்பாக செலுத்தலாம். டவுன்-பேமெண்ட் மற்றும் அட்வான்ஸ் தொகைகளை நீங்கள் முழுமையாக திரும்ப பெற முடியும். ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா தொழிற்சாலையில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக நீங்கள் இதனை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே டவுன்-பேமெண்ட் மற்றும் அட்வான்ஸ் தொகை முழுமையாக திரும்ப கிடைக்கும்.

பெட்ரோல் அடிக்கற காசுல ட்யூ கட்டீரலாம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கறது ரொம்ப ஈஸி... எப்படினு தெரியுமா?

4. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கான நடைமுறைகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், டெலிவரி தேதி தெரிவிக்கப்படும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன. நீங்கள் வாங்கிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உங்கள் வீட்டிற்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

Most Read Articles

English summary
Step by step guide to the ola electric scooter purchasing process
Story first published: Wednesday, September 15, 2021, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X