சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

சூப்பர் சோகோ சியுமினி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த புதிய அப்டேட் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமோட்டோ என்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அதிகளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனமாக அந்த நாட்டில் விளங்கி வருகிறது.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

இந்தியாவில் சூப்பர் சோகோ சியுமினி மற்றும் சூப்பர் சோகோ சிபிஎக்ஸ் என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக பேர்டு க்ரூப் நிறுவனத்துடன் இந்த நிறுவனம் சமீபத்தில் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

விமோட்டோ நிறுவனம் கடந்த ஆண்டில் சூப்பர் சோகோ என்ற சீன பிராண்ட் உடனான கூட்டணியில் டிஎஸ் ஸ்ட்ரீட் ஹண்டர், டிசி வாண்டரர் மற்றும் சியுமினி என்ற மூன்று எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வெளியிட்டது.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

ஆனால் இந்திய சந்தைக்கு சூப்பர் சோகோ சியுமினி மற்றும் சூப்பர் சோகோ சியுஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே சரியானவையாக இருக்கும் என்று பேர்டு க்ரூப் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தெரிந்து கொண்டதால், இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நம் நாட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

இதன் முதற்கட்டமாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டெல்லியில் இயங்கும் சவாரி-பகிர்வு திட்டத்திற்கு 20 சூப்பர் சோகோ சியுமினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

பேர்ட் எலக்ட்ரிக் பிராண்டில் இஎஸ்1+ என்ற பெயரில் கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சியுமினி மாடல், ஐரோப்பிய சந்தைகளில் தயாரிப்பு பிராண்டின் ஆரம்ப நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்படுகின்றது.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0.6 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் 0.96kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்புடன் என்சிஎம் தொழிற்நுட்பம், அதனை கண்ட்ரோல் செய்யும் எஃப்.ஒ.சி3.3 கண்ட்ரோல் யூனிட் உடன் கொடுக்கப்பட உள்ளது.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

இந்த பேட்டரியின் எடை வெறும் 7.2 கிலோ மட்டுமே என்பதால் இதனை வீட்டிலும் அலுவலகத்திலும் சார்ஜ் செய்வது எளியதாகும். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 7 மணிநேரங்கள் தேவைப்படும் என்றும், முழு சார்ஜில் 60ல் இருந்து 70கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன சூப்பர் சோகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயாராக இருங்கள்...! நிச்சயம் இந்தியாவிற்கு வருகை தருமாம்...

சியு மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 45கிமீ வேகத்தில் இயங்க முடியும். எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12 இன்ச்சில் சக்கரங்களை பெறும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகளவில் சிவப்பு, கருப்பு, க்ரே மற்றும் வெள்ளை என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Super Soco confirmed to launch CUMini electric scooter in India.
Story first published: Sunday, March 21, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X