சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

சுஸுகி நிறுவனத்தின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 18) அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் இந்த ஸ்கூட்டரின் பெயரை சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

எனினும் இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஓலா எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இது இருக்கும். சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே பர்க்மேன் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான் சுஸுகி நிறுவனம் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும், இது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சுஸுகி நிறுவனம் என்ன செய்ய போகிறது? என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

எனினும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு சில அம்சங்கள் குறித்த தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதன் ஸ்டைல் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் துள்ளலாக இருக்கும் என்பது தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழு எல்இடி லைட் வசதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

அத்துடன் முழு டிஜிட்டல் டிஸ்ப்ளேவையும் இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் நிறைய கனெக்டிவிட்டி வசதிகளை பெற முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் எவ்வளவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை உறுதி செய்ய முடியவில்லை.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

எனினும் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டரில் இருந்து 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது அனைத்து கேள்விகளுக்கும் நாளை நமக்கு பதில் கிடைத்து விடும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை சுஸுகி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் முதல் 1.20 லட்ச ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த விலையில்தான் அறிமுகமாகி வருகின்றன. எனவே சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையும் இந்த அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஓரளவிற்கு குறைத்தது. அத்துடன் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது வரிகளை குறைத்து கொண்டன. இருப்பினும் கூட தற்போதும் பெட்ரோல், டீசலின் விலை அதிகம் என்றுதான் வாகன ஓட்டிகள் கருதுகின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து அவர்கள் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் பரிசீலனை செய்யலாம். முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

எனவே இந்திய சந்தையில் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த குறையும் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

சிங்கிள் சார்ஜில் 150 கிமீ ஓடும்... சுஸுகியின் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்ன விலையில் வருது தெரியுமா?

அதேபோல் நிறைய எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டிகோர் எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவை இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான எலெக்ட்ரிக் கார்களாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Suzuki s new electric scooter to launch in india tomorrow check details here
Story first published: Wednesday, November 17, 2021, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X