இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த டர்ஃபோர்ம் என்கிற எலக்ட்ரிக் மொபைலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் அதன் அட்டகாசமான புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

இந்த அமெரிக்க எலக்ட்ரிக் மொபைலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் லூனா மோட்டார்சைக்கிளின் கேஃப்-ரேஸர் எடிசனாக வெளிவந்துள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கின் பெயர் ‘ரேஸர் எடிசன்' என சூட்டப்பட்டுள்ளது. இதனால் லூனா மாடலுக்கு ‘ஸ்க்ராம்ப்ளர் எடிசன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

இவை இரண்டும் ஒரே இயக்குதளத்தில் தான் உருவாக்கப்படவுள்ளன. இவற்றின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டில் இருந்தே துவங்கவுள்ளன. அதேபோல் இவை இரண்டிற்கும் ஒரே மாதிரியாக 24,000 அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.17.49 லட்சமாகும். லூனா ஸ்க்ராம்ப்ளர் மாடலின் அதே சிறப்பம்சங்களை தான் அதன் புதிய ரேஸர் எடிசனும் பெற்றுள்ளது. இந்த வகையில் இவை இரண்டிலும் அதிகப்பட்சமாக 55 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

இதில் 11.8 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட உள்ளது. ஒரே இயக்குத்தளத்தில் உருவாக்கப்படுவதால் இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் எடை கிட்டத்தட்ட ஒரே அளவில் (200 கிலோ) தான் இருக்குமாம்.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

லூனா மோட்டார்சைக்கிளின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக 96கிமீ வரையில் பயணம் செய்ய முடியும் என டர்ஃபோர்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று விதமான ரைடிங் மோட்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக்கில் பாதசாரிகளையும், மற்ற வாகனங்களையும் எச்சரிக்க "சோனிக் அவ்ரா" என்கிற ஒலி எழுப்பான் வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

லூனா மாடலின் இரு எடிசன்களும் தோற்றத்தில் மட்டுமே வேறுப்படுகின்றன. இதன்படி ஸ்க்ராம்ப்ளர் வெர்சனில் ஆஃப்-ரோடுகளுக்கு ஏற்ற டயர்களும், கேஃப் ரேஸரில் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

அதேபோல் புதிய கேஃப் ரேஸரின் சஸ்பென்ஷன் கிட்டத்தட்ட 1.5 இன்ச்கள் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லைட் விளக்கை சுற்றிலும் வழங்கப்படும் கௌலும் ரேஸர் எடிசனில் வேறுப்படுகிறது. வேறுபடுகிறது என்று சொல்வதை காட்டிலும் கூடுதல் அழகாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

பைக்கை சுற்றிலும் உள்ள மற்ற அலுமினிய பேனல்களில் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஒற்றை-துண்டு ஹேண்டில்பார் உள்பட. கேஃப் ரேஸர் எடிசனில் ஹேண்டில்பார், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, ஸ்விங்கார்ம் உள்ளிட்டவை அனைத்தும் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

இணையத்தை கலக்கும் அழகான லூனா எலக்ட்ரிக் பைக்!! அமெரிக்காவில் தயாராகிறது...

உண்மையில் இவையே இந்த ரேஸர் எடிசன் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஸ்போர்டியர் தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஏற்றுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 3.4 கிலோவாட்ஸ் ஆன்போர்டு சார்ஜர் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Check Out Tarform Luna Cafe Racer, A Beautiful Electric Motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X