ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

கிராஃபிக் மாடிஃபிகேஷன்ஸ் மற்றும் திருத்தியமைப்பு நடவடிக்கைகளுக்கு குஜராத், சூரத்தை சேர்ந்த அகோஸி கஸ்டம்ஸ் என்ற மாடிஃபிகேஷன் நிறுவனம் பிரபலமானது.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

அவ்வப்போது ஜாவா பைக்குகளையும் மாடிஃபை செய்யும் இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேட் பைன் க்ரீன் நிறத்திற்கு ஜாவா பெராக் பைக்கை மாடிஃபை செய்ததை சமீபத்தில் பார்த்திருந்தோம்.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

அதன் தொடர்ச்சியாக சூரத்தை சேர்ந்த ‘சீமா பைக்ஸ்' என்ற பெயர் கொண்ட ஜாவா டீலர்ஷிப் ஒன்றிற்காக ஜாவா 42 பைக் ஒன்றை ஸ்டார்ட்லைட் நீல நிறத்திற்கு அகோஸி கஸ்டம்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய நிறத்தினால் பைக்கின் தோற்றம் கவனிக்கத்தக்க அளவில் மெருகேறியுள்ளது.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் இருபக்கமும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெட்ரோல் டேங்கில் பொருத்தப்படும் ஜாவா மோட்டார்சைக்கிளின் லோகோவில் கோல்டன் ஸ்ட்ரிப்பிற்கு மாற்றாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா 42 2.1 பைக்கை போன்று இந்த கஸ்டமைஸ்ட் 42 பைக்கின் பெட்ரோல் டேங்கிலும் ரேசிங் ஸ்ட்ரிப்கள் க்ரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரேசிங் ஸ்ட்ரிப்களின் மீது ‘42 கிளாசிக் லெஜண்ட்ஸ்' என்ற கிராஃபிக்ஸையும் பார்க்க முடிகிறது.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

பைக்கிற்கு கருப்பு (க்ரே)- நீலம் என்ற இரட்டை பெயிண்ட் மிகவும் எடுப்பாக உள்ளது. மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான ஜாவா 42 பைக்கின் 293சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், லிக்யுடு-கூல்டு, டிஒஎச்சி மோட்டாரை தான் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கும் கொண்டுள்ளது.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

அதிகப்பட்சமாக 27.33 பிஎஸ் மற்றும் 27.02 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கான்ஸ்டண்ட் -மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஜாவா 42 பைக்கின் விலைகள் தற்சமயம் ரூ.1,68,215ல் இருந்து ரூ.1,77,157 வரையில் உள்ளன.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

இதன் அப்டேட் மற்றும் ப்ரீமியம் வெர்சனாக கொண்டுவரப்பட்ட 42 2.1 பைக்கிலும் மேற்கூறப்பட்ட என்ஜின் தான் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மிக பெரிய மாற்றமாக இந்த பைக்கில் புதிய எக்ஸ் வடிவிலான ஹெட்லேம்ப் க்ரில் மற்றும் அதற்கு மேலே சிறிய அளவில் புதிய கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

42 பைக்கில் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்படும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள், பின்பக்க இரட்டை ஷாக்குகள், டெலெஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் ஹெட்லேம்ப் சுற்றிலும் உள்ள பகுதிகள் அனைத்தும் இந்த ப்ரீமியம் எடிசன் பைக்கில் கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜாவா பைக்கை வாங்கினால் இப்படி மாடிஃபை செய்யனும்!! மாடர்ன் பைக்குகளுக்கே இது சவால்விடும்!

இவை எல்லாவற்றையும் விட ஸ்போக்டு ரிம்களுக்கு மாற்றாக கருப்பு நிற அலாய் சக்கரங்களை 42 2.1 பைக் பெற்றுள்ளது. ஜாவா 42 சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Take A Look At This Tastefully Customised Jawa Forty Two.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X