தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

உலகம் சுற்றி வரும் தல அஜித்தின் புதிய படங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

நடிப்பைப் போலவே வாகனங்கள் மீதும், பயணங்களின் மீதும் அதீத காதல் கொண்டவரலாக நடிகர் அஜித் குமார் இருக்கின்றார். இதனை உறதிப்படுத்தும் வகையில் அவர் தற்போது உலக சுற்று பயணத்தை இருசக்கர வாகனத்தில் மேற்கொண்டு வருகின்றார். அவர் பயன்படுத்தி வருவது ஓர் மிக விலை உயர்ந்த பிரீமியம் தர வாகனம் ஆகும்.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

தல அஜித் பயன்படுத்தி வருவது பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) இருசக்கர வாகனம் ஆகும். இந்த இருசக்கர வாகனத்திலேயே தனது உலக சுற்று பயணத்தை அவர் மேற்கொண்டு வருகின்றார். ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அஜித்தின் உலக பயணம் பற்றிய புதிய படம் வெளியாகி இருக்கின்றது.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

இதனால், அவருடைய ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர் என்றே கூறலாம். அஜித் தற்போது இந்தியா மட்டுமின்றி சாலை வழியாக பிற நாடுகளுக்கும் பயணித்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில், அவர் காத்மாண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை அண்மையில் திரைப்பட தயாரிப்பாளரும், அஜித்தின் மிக சிறந்த நண்பர்களில் ஒருவருமான போனி கபூர் பகிர்ந்துக் கொண்டார்.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

இன்னும் சில படங்கள் இராணுவ வீரர்களுடன் இருப்பதைப் போலவும், நேபாளி வீரர்களுடன் இருப்பதைப் போலவும் வெளியாகின. இந்த நிலையிலேயே வாகா எல்லையில் அவர் பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் பைக்கில் நின்றுக் கொண்டிருப்பதைப் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அஜித் தனது சுற்றுப் பயணத்தின் அடிப்படையில் ஐரோப்பாவிலும் நுழைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

அஜித் தனது சுற்று பயணத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதை நம்மால் காண முடிகின்றது. பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக் கவசம் ஆகியவற்றை அவர் அணிந்திருக்கின்றார். இது மிகவும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும்.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

அஜித் பயன்படுத்திய இருசக்கர வாகனமானது 1170 சிசி திறனை வெளியேற்றக் கூடிய பாக்ஸர் எஞ்ஜினைக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். மிக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனம் இது. இதன் எஞ்ஜின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும், 125 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ. 15,85,000 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மிக மிக உயர்ந்த விலை பைக்கிலேயே அஜித் தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். இந்த பைக்கில் பன்முக பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 கிமீட்டர் வரை மைலேஜ் வழங்கும். இதில் பாதுகாப்பு வசதிகளாக முன்பக்க வீலில் இரட்டை டிஸ்க் பிரேக்கும், ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் இதன் விலை பல மடங்கு அதிகமானதாக காட்சியளிக்கின்றது.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

முன்னதாக கூறியதைப் போல அஜித் மிகப் பெரிய வாகன பிரியராக இருக்கின்றார். அவரிடத்தில் பன்முக பிரீமியம் தர இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் (BMW S 1000 RR), பிஎம்டபிள்யூ கே 1300 எஸ் (BMW K 1300 S), அப்ரில்லா கேபோனோர்டு 1200 (Aprilia Caponord 1200) மற்றும் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ் -14ஆர் (Kawasaki Ninja ZX-14R) ஆகிய இருசக்கர வாகனங்களை அவர் வைத்திருக்கின்றார்.

தொடரும் பயணம்... உலகம் சுற்றும் தல அஜித்தின் புதிய படங்கள்! இது வேற லெவல் அப்டேட்டுங்க!

இத்துடன், அவரிடத்தில் பல பிரீமியம் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. ஃபெர்ராரி 458 இட்டாலிய (Ferrari 458 Italia), பிஎம்டபிள்யூ 740 எல்ஐ (BMW 740 Li) மற்றும் ஹோண்டா அக்கார்ட் வி6 (Honda Accord V6) ஆகிய கார் மாடல்கள் அவரிடத்தில் இருக்கின்றன.

வலிமை படம்

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பணிகளில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த தாமதத்தினால் படக்குழு போட்ட பட்ஜெட்டை தாண்டி படப்பிற்கான செலவு ஏற்பட்டிருக்கின்றது. இது தயாரிப்பாளர் போனி கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மற்றுமொரு படத்தை குறைந்த பட்ஜெட்டில் நடித்து தர அஜித் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thala ajith sets off for a world tour with bmw r 1200 gs bike
Story first published: Friday, November 19, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X