இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

லைசென்ஸ், பதிவெண் என சான்றுகள் தேவைப்படா மின்சார வாகனங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். மொத்தம் எத்தனை வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

நாளுக்கு இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவை, பெட்ரோல்-டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான பராமரிப்பு செலவுக் கொண்டவை ஆகும். இதுமட்டுமின்றி, சுற்றுப்புற சூழலுக்கும் நண்பனாக விளங்கும். இதன்காரணத்தினால்தான் அரசும் மின் வாகனங்களின் இயங்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மிக அதிக தீவிரம் காட்டி வருகின்றது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

இதனால், புதுமுக மின்சார வாகனங்களின் அறிமுகமும் தற்போது தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மின் வாகனத்தின் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் வகையில் அதிக பலனை வழங்கக் கூடிய, அதாவது, குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக் கூடிய மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவெண் தேவைப்படாத மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றியே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இதுகுறித்த தகவல் நிச்சயம் உங்களுக்கு உதவும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா இ5

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைச் செய்து வரும் குறைந்த திறன் மின்சார ஸ்கூட்டர்களில் ஹீரோ ஆப்டிமா இ5 மாடலும் ஒன்று. இந்த 250வாட் திறன் கொன்ட டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே இயங்கும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

இந்த ஸ்கூட்டரில் மின்சார திறனை சேமித்து வைக்கும் வகையில் 48வி/28ஏஎச் லித்தியம் அயன் பேட்டரியை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரை லீட்-ஆசிட் பேட்டரி வேரியண்டிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஒகினவா லைட்

அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒகினவா லைட் மாடலும் ஒன்று. ஃபங்கி ஸ்டைலிலான இந்த ஸ்கூட்டரில் முழுக்க முழுக்க எல்இடி ஹெட்லேம்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

தொடர்ந்து, பல்வேறு தகவல்களை வழங்கக் கூடிய தர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், இ-ஏபிஎஸ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் டிஸ்க் பிரேக்-டிரம் பிரேக் உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டரிலும் 250வாட் பிஎல்டிசி மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 25 கிமீ பயணிக்கக் கூடியது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

இதற்கு மின்சாரத்தை வழங்குவதற்காக 1.25 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஒகினவா ஆர்30

ஒகினவா நிறுவனத்தின் மற்றுமொரு ஆவணங்கள் தேவைப்படா மின்சார வாகனமாக ஆர்30 மாடல் ஸ்கூட்டர் இருக்கின்றது. உருவத்தில் மட்டுமே இந்த வாகனம் வேறுபட்டு காணப்படுகின்றது. பிற அம்சத்தில் ஒகினவா லைட்டுடன் ஒத்தும்போகும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஒகினவா ஆர்30 மின்சார ஸ்கூட்டரில் 1.25kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 250வாட் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவையே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின்மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 30கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. மேலும், இதன் பேட்டரி ஒரு முழுமையான சார்ஜில் 60கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஆம்பியர் ரியோ எலைட்

ஹோண்டா டியோ மாடலைப் போன்ற உருவமைப்பைக் கொண்ட மின்சார ஸ்கூட்டரே ஆம்பியர் ரியோ எலைட். இது ஓர் பிரீமியம் தோற்றம் கொண்ட மின்சார ஸ்கூட்டராகவும் இது இருக்கின்றது. இதன் எல்இடி ஹெட்லேம்ப், வால்பகுதி மின் விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை இதன் பிரீமியம் தோற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஆம்பியர் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் 250வாட் பிஎல்டிசி மின் மோட்டாரைப் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இத்துடன், லித்தியம் அயன் மற்றும் லீட்-ஆசிட் என இரு விதமான பேட்டரி தேர்வுகளில் இந்த மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் வழங்குகின்றது. இதன் டாப் ரேஞ்ஜ் 60 கிமீ தூரம் ஆகும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் இ2

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் இ2 மின்சார ஸ்கூட்டரே இந்தியாவின் குறைந்த விலைக் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வசதிக் கொண்ட மின்சார ஸ்கூட்டராகும். இதில், 250 வாட் எலெக்ட்ரிக்மோட்டார், 48வோல்ட்-28Ah லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 65கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ

லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ மின்சார ஸ்கூட்டரும் இந்தியாவின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டரில் 250 வாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

மேலே பார்த்த அனைத்து மின்சார வாகனங்களும் மணிக்கு 25கிமீட்டருக்கும் குறைந்த வேகத்தில் பயணிப்பவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வேகத்தில் ஓடும் திறன்கொண்ட எந்த வாகனத்திற்கும் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்பதே விதியாகும்.

இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க..

இதுமட்டுமின்றி இத்தகைய திறன் கொண்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் அல்லது பியூசி எனப்படும் மாசு உமிழ்வு தர சான்றும் தேவையில்லை என விதிகள் கூறுகின்றது. இந்த வசதிக் கொண்ட இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலையே நாம் பார்த்தோம்.

Most Read Articles

English summary
These Electric Scooters No Need Registration & Licence. Read In Tamil.
Story first published: Tuesday, April 13, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X