மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இங்கிலாந்தை சேர்ந்த வொய்ட் மோட்டார்சைக்கிள் கன்செப்ட்ஸ், டபிள்யூ.எம்.சி250இவி என்ற பெயர் கொண்ட அதன் எலக்ட்ரிக் பைக் மாதிரியை வெளியிட்டுள்ளது. இந்த எதிர்கால மோட்டார்சைக்கிளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

நிலத்தில் இயங்கும் மிக வேகமான மோட்டார்சைக்கிளை உருவாக்கும் முயற்சியாகவே இந்த கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2020ஆம் ஆண்டில் மோட்டோ ஜிபி லெஜண்ட் மேக்ஸ் பியாகி, வோக்சன் வாட்மேன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அதிவேகத்தில் புதிய உலக சாதனையை படைத்திருந்தார்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அவர் அதிகப்பட்சமாக மணிக்கு 367கிமீ வேகத்தில் சென்றது சாதானையாக பார்க்கப்படுகிறது. அதனை முறியடிக்கும், அதாவது மணிக்கு 400கிமீ வேகத்தில் செல்லக்கூடிய மோட்டார்சைக்கிளில் உருவாக்க, வடிவமைக்கப்பட்ட கான்செப்ட் மாடல் தான் இந்த டபிள்யூ.எம்.சி250 இவி ஆகும்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

நேர்த்தியான காற்றியக்கவியலுக்கு இணைக்கமான தோற்றம் உள்ளிட்டவை எல்லாம் வைத்து பார்த்தால், இத்தகைய வேகத்தை எட்டுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த வொய்ட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டில் இருப்பது போன்றே தோன்றுகின்றது.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இதன் உடல் தோற்றம் இரண்டாம் தலைமுறை சுஸுகி ஹயபுஸாவின் தோற்றத்தால் கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலக்ட்ரிக் பைக் சரியாக மைய-அடிப்பகுதியில் வி-ஏர் என்ற பெயரில் குழாய் ஒன்றை கொண்டுள்ளது.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இது எலக்ட்ரிக் பைக்கின் இழுவை குணகத்தை கிட்டத்தட்ட 70 சதவீதம் வரையில் குறைக்கும். இந்த கான்செப்ட் மாடலில் விங்லெட்கள் எனப்படும் இறக்கைகள் இல்லை. பொதுவாக, மிக அதிவேக இயக்கத்திற்காக தயாரிக்கப்படும் மோட்டார்சைக்கிளில் இதனை பொருத்துவார்கள்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

ஆனால் ஏற்கனவே மற்ற சாதாரண பைக்குகளை காட்டிலும் இந்த எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலின் முன்பக்க எடை ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு மேல் கூடுதல் எடையை சேர்க்க வேண்டாம் என்பதற்காக விங்லெட்களை தயாரிப்பு நிறுவனம் இந்த கான்செப்ட்டில் வழங்காமல் இருந்திருக்கலாம்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இந்த எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டின் முன்பக்கத்தில் இரு 20 கிலோவாட்ஸ் மோட்டார்களும், பின்பக்கத்தில் இரு 30 கிலோவாட்ஸ் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அதிகப்பட்சமாக 134 பிஎச்பி வரையில் பெறலாம் என்கிறது வொய்ட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இந்த இயக்க ஆற்றல் மற்ற பெட்ரோல்-மோட்டார்சைக்கிள் உடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், இதுவே அந்த வேகத்தை எட்ட போதும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் 2022ல் இந்த கான்செப்ட் மாடல் மோட்டார்சைக்கிளாக உருவெடுக்கும்போது இயக்க ஆற்றல் சற்று அதிகரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

இந்த எலக்ட்ரிக் பைக்கில் மெஷிண்டு அலாய் ஸ்விங்கார்மை பயன்படுத்தவுள்ளனர். இது பைக்கை அழுக்குப்படாமல் தடுப்பது மட்டுமில்லாமல் இயக்கி மற்றும் இயக்கப்படுகின்ற சக்கர பற்களுக்கு தொடர்ந்து ஆயிலை வழங்கும்.

மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்க வேண்டும்!! அதிவேக சாதனையை முறியடிக்க உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பைக்!

300 கிலோ எடையில் உருவாக்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் பைக்கின் முன் சக்கரத்தில் 340மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 310மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட உள்ளன. 17 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த கான்செப்ட் மாடலில் பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
'Hayabusa-inspired' electric bike aims to break land speed record at 400 kmph (White Motorcycle Concepts).
Story first published: Sunday, June 27, 2021, 3:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X