இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

கடந்த 2021 மே மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் ஸ்கூட்டர்களின் விற்பனை பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. கடந்த மே மாதத்தில் நாட்டில் பல ஷோரூம்கள் மூடப்பட்டதால், வெறும் 47,345 ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

அதுவே இதற்கு முந்தைய 2021 மே மாதத்தில் 2,63,480 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் அதிரடியாக 82.03 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

எல்லா மாதங்களிலும் குறைந்தது 1 லட்சம் யூனிட்களாவது விற்பனையாகிவிடக்கூடிய ஹோண்டா ஆக்டிவா கடந்த மே மாதத்தில் 17,006 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இதுதான் நம்பர் ஒன்.

Rank Model May-21 Apr-21 Growth (%)
1 Honda Activa 17,006 1,09,678 -84.49
2 Suzuki Access 9,706 53,285 -81.78
3 TVS Jupiter 6,153 15,570 -60.48
4 TVS NTorq 4,337 19,959 -78.27
5 Suzuki Burgman 2,745 8,154 -66.34
6 Hero Pleasure 2,208 18,298 -87.93
7 Honda Dio 1,697 17,269 -90.17
8 TVS Pep+ 1,609 8,143 -80.24
9 Yamaha RayZR 1,060 7,512 -85.89
10 Yamaha Fascino 824 5,612 -85.32
இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

இரண்டாவது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக 9,706 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஏப்ரலில் 53,285 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை சுஸுகி விற்பனை செய்து இருந்தது.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

டிவிஎஸ் ஜூபிட்டர் 6,153 யூனிட்களும், என்டார்க் 4,337, சுஸுகி பர்க்மேன் 2,745 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகப்பட்சமாக ஏப்ரலில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த டிவிஎஸ் என்டார்க்கின் விற்பனை 78.27 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

ஜூபிட்டரின் விற்பனை 60.48 சதவீதம் குறைந்துள்ளது. 2021 ஏப்ரலில் 18,298 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த ஹீரோ பிளஷர் கடந்த மாதத்தில் வெறும் 2,208 யூனிட்களே விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

இதனை காட்டிலும் இந்த டாப்-10 வரிசையில் 7வது இடத்தில் உள்ள ஹோண்டா டியோவின் விற்பனை ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், 90.17 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்துள்ள டிவிஎஸ் பெப்+ 1,609 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரியளவில் சரிந்துபோன ஸ்கூட்டர் விற்பனை!! கடந்த மே மாத நிலவரம் அப்படி இருக்கு...

கடைசி இரு இடங்களில் யமஹா ஸ்கூட்டர்களான ரே இசட்.ஆர் மற்றும் ஃபேஸினோ மாடல்கள் உள்ளன. இந்த நிலையில் யமஹா புதிய தலைமுறை ரே இசட்.ஆர் மற்றும் ஃபேஸினோ ஸ்கூட்டர்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Scooters In May 2021. All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X