இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

தற்சமயம் உலகளவில் நிலவிவரும் குறை கடத்திகளுக்கான பற்றாக்குறையினால் சமீப மாதங்களாக அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கான விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்த பிரச்சனைகளில் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி ஸ்கூட்டர்களும் உட்படுகின்றன.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர்கள் மட்டுமே மொத்தமாக 4,36,667 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதுவே 2020 அக்டோபரில் டாப்-10 ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 5,32,435 யூனிட்களாக இருந்தது. இந்த வகையில் டாப்-10 ஸ்கூட்டர்களின் விற்பனை 18 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

இந்த டாப்-10 ஸ்கூட்டர்களில் வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா தான் முதலிடத்தில் உள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் மட்டும் 1,96,699 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,39,570 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 18% குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

ஆக்டிவாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் மாடல் 72,161 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டரின் விற்பனை பெரிய அளவில் குறையவில்லை. வெறும் 2.69 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. ஏனெனில் 2020 அக்டோபரில் கிட்டத்தட்ட கடந்த மாதத்திற்கு இணையாக 74,159 யூனிட் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

ஹோண்டா ஆக்டிவாவை போல் டிவிஎஸ் ஜூபிட்டரும் 110சிசி மற்றும் 125சிசி-களில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாவது இடத்தை சுஸுகி ஆக்ஸஸ் 46,450 யூனிட்கள் விற்பனை உடன் தக்க வைத்து கொண்டுள்ளது. 2020 அக்டோபரில் 52,441 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை 11.42% குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

4வது மற்றும் 5வது இடங்களில் முறையே டிவிஎஸ் எண்டார்க் மற்றும் ஹோண்டாவின் மற்றொரு பிரபலமான ஸ்கூட்டர் மாடலான டியோவும் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 25,693 மற்றும் 25,641 ஆகும். இவற்றின் விற்பனையும் 2020 அக்டோபருடன் ஒப்பிடுகையில் முறையே 18.50% மற்றும் 41.79% குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபரில் 31,524 எண்டார்க் ஸ்கூட்டர்களும், 44,046 டியோ ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் குறிப்பாக, ஆக்டிவாவின் விற்பனை குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் பெரிய அளவில் குறைந்துள்ளது போல் டியோ ஸ்கூட்டர்களின் விற்பனையும் சுமார் 18,405 யூனிட்கள் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

முதல் 5 இடங்களை கடந்துவந்துவிட்டோம், ஆனால் இன்னமும் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பின் ஸ்கூட்டர் எதுவுமே வரவில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆறாவது இடத்தில் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படும் முதல் ஹீரோ ஸ்கூட்டராக பிளஷர் 21,716 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2020 அக். உடன் ஒப்பிடுகையில் பிளஷரின் விற்பனை 7.16% குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

இதன்பின் இந்த டாப்-10 சேல்ஸ் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்டில் உள்ள மாடல்கள் அனைத்தும் 20 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டவையே. ஹீரோ பிளஷருக்கு அடுத்த இரு இடங்களில் யமஹா தயாரிப்புகளாக ரே இசட்.ஆர் மற்றும் ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் முறையே 13,601 மற்றும் 13,487 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

இதில் ரே இசட்.ஆர் மாடலின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் 13.63% குறைந்திருக்க, ஃபேஸினோ ஸ்கூட்டர்களின் விற்பனை 0.95% அதிகரித்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர்களில் யமஹா ஃபேஸினோ மட்டுமே நேர்மறையான விற்பனையை பதிவு செய்துள்ளது. 2020 அக்.ஐ காட்டிலும் கடந்த மாதத்தில் 127 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

இந்த டாப்-10 ஸ்கூட்டர்கள் லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஹீரோ டெஸ்டினி (12,898 யூனிட்கள்) மற்றும் இந்த லிஸ்டிலேயே மூன்றாவது ஹோண்டா ஸ்கூட்டராக கிரேஸியா (8,321) உள்ளன. இதில் கிரேஸியாவை காட்டிலும் ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 51.72% சரிந்துள்ளது. கிரேஸியாவின் விற்பனை 27.52 குறைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கூட்டர் #scooters
English summary
Top 10 Scooters Oct 2021 - Topped by Honda Activa.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X