இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்தியாவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்தியாவில் இருந்து நடப்பாண்டு அக்டோபர் மாதம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பஜாஜ் பாக்ஸர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 1,21,026 பஜாஜ் பாக்ஸர் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 1,09,688 ஆக சரிந்துள்ளது. இது 9.37 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்த பட்டியலில் ஸ்டார் சிட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 52,776 ஸ்டார் சிட்டி பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 51,807 ஆக சரிந்துள்ளது. இது 1.84 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 32,406 ஆக இருந்த பஜாஜ் பல்சர் பைக்கின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 26,711 ஆக சரிந்துள்ளது. இது 17.57 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்த பட்டியலில் பஜாஜ் டிஸ்கவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15,916 ஆக இருந்த பஜாஜ் டிஸ்கவர் பைக்கின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 19,740 ஆக உயர்ந்துள்ளது. இது 24.03 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பஜாஜ் சிடி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

பஜாஜ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஜாஜ் நிறுவனம் 16,284 சிடி பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 19,232 ஆக உயர்ந்துள்ளது. இது 18.10 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா நவி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து 9,872 நவி பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 12,946 ஆக உயர்ந்துள்ளது. இது 31.14 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்த பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 13,058 அப்பாச்சி பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 12,549 ஆக சரிந்துள்ளது. இது 3.90 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் யமஹா எஃப்இஸட் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் யமஹா நிறுவனம் 10,166 எஃப்இஸட் பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 10,603 ஆக உயர்ந்துள்ளது. இது 4.30 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ ஹங்க் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 491 ஹங்க் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்றுமதி செய்திருந்தது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 8,480 ஆக உயர்ந்துள்ளது. இது 1627.09 சதவீத வளர்ச்சியாகும். இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா டியோ பத்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,121 டியோ ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்திருந்தது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகள் இவைதான்... முதலிடத்தில் பஜாஜ் பாக்ஸர்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7,962 ஆக உயர்ந்துள்ளது. இது 30.08 சதவீத வளர்ச்சியாகும். இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பைக்குகளின் பட்டியலில் உள்ள ஸ்டார் சிட்டி, பல்சர், டிஸ்கவர், அப்பாச்சி மற்றும் டியோ போன்ற தயாரிப்புகள் இந்திய சந்தையிலும் மிகவும் பிரபலமான தயாரிப்புகளாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Top 10 two wheeler exports october 2021 bajaj boxer leads chart
Story first published: Monday, December 20, 2021, 23:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X