இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

அடுத்த வருடம் இந்தியாவை அலங்கரிக்கும் வகையில் 10 புதுமுக மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவை குறித்த முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2021ம் ஆண்டில் இந்தியாவில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னணி நிறுவனங்கள் சில புதுமுக இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க தயாராக இருக்கின்றன.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

அவற்றில் சில முக்கியமான தயாரிப்புகளை பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, வரும் 2022ம் ஆண்டில் இந்திய மின் வாகன சந்தையைக் களக்கும் வகையில் விற்பனைக்கு வர இருக்கும் பத்து புதுமுக எலெக்ட்ரிக் டூ வீலர்கள் பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77)

அல்ட்ராவைலட் எஃப்77 மின்சார மோட்டார்சைக்கிள் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது. அப்போதில் இருந்து இதன் மீது மின் வாகன பிரியர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இருப்பினும், இது அறிமுகம் அரங்கேறியதாக இல்லை. பல காரணங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த இதன் அறிமுகம் அடுத்த ஆண்டு அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

இந்த மின்சார மோட்டார்சைக்கிள் அதி திறன் வெளிப்பாட்டு வசதிகளுடன் விற்பனைக்கு இருக்கின்றது. 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் மற்றும் மணிக்கு 140 கிமீ எனும் உச்சபட்ச வேகண் ஆகிய திறன்களுடன் இது மின்வாகன சந்தையைக் களம் காண வர இருக்கின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலெக்ட்ரிக் (Suzuki Burgman Street Electric)

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பெட்ரோலால் இயங்கும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலை தழுவிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது பர்க்மேன் ஸ்ட்ரீட் இவி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகம் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்கு அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒற்றை முழுமையான சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

டார்க் டி6எக்ஸ் (Tork T6X)

டார்க் டி6எக்ஸ் 2016ம் ஆண்டிலேயே வெளியீட்டைப் பெற்றுவிட்டது. இதன் அறிமுகமும் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக தள்ளிப்போடப்பட்டு, தற்போது அடுத்த 2022ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இ-மோட்டார்சைக்கிளும் பன்முக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. குறிப்பாக, முழு சார்ஜில் 100 கிமீ தூரம் பயணம் மற்றும் மணிக்கு 100 கிமீ வேகம் ஆகிய திறன்களுடன் இ-பைக் வர உள்ளது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

ஹீரோ மோட்டோகார்ப் வைடா (Hero MotoCorp Vida)

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனமாக வைடாவின் வருகை அமைய இருக்கின்றது. தாய்வான் நிறுவனமான கோகோரோ நிறுவனத்தின் கூட்டணியில் இந்த மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. இதன் அறிமுகம் அடுத்த ஆண்டின் மத்திக்குள் அரங்கேறிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் அம்சங்கள் பற்றிய தகவலை நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கின்றது. ஆகையால், தோராயமாக இதுகுறித்த தகவலை வழங்க முடியாத நிலை இருக்கின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

எம்ஃப்ளக்ஸ் ஒன் (Emflux One)

எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பே இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ரக மின்சார பைக்காக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையும் 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை நிறுவனம் உறுதிப்படவில்லை.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

இப்பைக் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். இத்துடன், இப்பைக்கில் ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 (Hero Electric AE-47)

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது நிறுவனத்தின் கீழ் கிடைத்து வரும் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் நிறுவனம் புதிதாக கொண்டு வர திட்டமிட்டிருக்கும் இ-வாகனமே ஏஇ-47 மாடல் ஆகும்.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

இந்த இ-பைக் இரு விதமான ரைடிங் மோட்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. பவர் மற்றும் ஈகோ ஆகிய மோட்களே இதில் இடம் பெற இருக்கின்றன. இத்துடன், 85 கிமீ மற்றும் 160 கிமீ எனும் இரு விதமான ரேஞ்ஜ் திறனிலும் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

ஒகினவா ஒகி 100 (Okinawa Oki100)

ஒகினவா நிறுவனத்தின்கீழ் வர இருக்கும் மிக முக்கியமான தயாரிப்பாக ஒகி100 இருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த திறன் கொண்ட இ-பைக்காக விற்பனைக்கு வர இருக்கின்றது. ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட) பேட்டரி, 200 கிமீ ரேஞ்ஜ் மற்றும் 120 உச்சபட்ச வேகம் ஆகிய திறன்களுடன் இது விற்பனைக்கு வர இருக்கின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

ஒகினாவா ஒகி90 (Okinawa Oki90)

ஒகினவா நிறுவனம் ஒகி100 இ-பைக்கைத் தொடர்ந்து ஒகி 90 இ-ஸ்கூட்டரையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது அதிகபட்சமாகக 200 கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தும் திறனுடன் சந்தையைக் களம் காண இருக்கின்றது. இத்துடன், ஸ்வாப்பபிள் பேட்டரி, மணிக்கு 90 கிமீ வேகம் ஆகிய திறன்களையும் இது பெற்றிருக்கும்.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

கோமகி வெனிஸ் (Komaki Venice)

கோமகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு நிறுவனம், விரைவில் புதிய வெனிஸ் இ-வாகனத்தை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதிக ஸ்டோரேஜ் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் திறன், ஸ்மார்ட் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களுடன் வெனிஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இத்தன மின்சார டூ-வீலரும் 2022ல அறிமுகமாக இருக்குது... ஒவ்வொன்னுத்தையும் இப்பவே வாங்கணும் போல இருக்குதே!

கோமகி ரேஞ்ஜர் (Komaki Ranger)

வரும் 2022ம் ஆண்டு சந்தையைக் களம் காண இருக்கும் மின்சார வாகன மாடல்களில் கோமகி ரேஞ்ஜர் வாகனமும் ஒன்று. இந்த இ-பைக்கில் 4 kW பேட்டரி பேக், 5 kW எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை இடம் பெற இருக்கின்றன. இத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் டிரைவிங் மோட் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

Most Read Articles

English summary
Top 10 upcoming e 2 wheelers in coming year
Story first published: Monday, December 20, 2021, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X