நீங்க சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்!!

பிரீமியம் ரக சைக்கிள்களை உங்களுக்கு பிடிக்குமா? அப்படினா உங்களுக்கான பதிலைதான் இப்பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

பெட்ரோல், டீசல் விற்பனை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. இதனால், ஏழை-எளிய மக்கள் தங்களின் சொந்த இருசக்கர வாகனத்தில் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். எரிபொருள் விலையுயர்வால் ஷேர் ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தனியார் பொது போக்குவரத்து வாகனத்திலும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

போதாத குறையாக கொரோனா அச்சம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் அரசு பொது போக்குவரத்து வாகனத்தில் செல்லவும் தயக்கம் காட்டுகின்றனர். இம்மாதிரியான பல்வேறு காரணங்களால் பலர் சைக்கிள் பயணத்திற்கு மாறத் தொடங்கியிருக்கின்றனர். ஏழைகள் மட்டுமில்லைங்க சில நடுத்தர குடும்பத்தினரும் சைக்கிள் பயன்பாட்டிற்கு மாற தொடங்கியுள்ளனர்.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

இத்தகையோர்க்கு உதவும் வகையில் ரூ. 30,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர சைக்கிள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இவையே தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாப் பிரீமியம் தர சைக்கிள்களாகும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

ஃபயர்ஃபாக்ஸ் டொர்னடோ 27.5டி

டைப்: மலையேற்றத்திற்கான பைக்

விலை: ரூ. 25,000

ஃபயர்ஃபாக்ஸ் டொர்னடோ 27.5டி ஓர் ஆரம்பநிலை சைக்கிளாகும். இதனைக் கொண்டு மலையேற்றம் போன்ற சாகச பயணங்களைக் கூட மிகவும் அசால்டாக செய்ய முடியும். ஆகையால், நகரம் மட்டுமல்லாத கிராமப்புறங்களின் கரடு, முரடான சாலைகளில்கூட சிறு தடையின்றி சுலபமாக பயணிக்க முடியும்.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

இதற்காக, ஸ்பெஷல் டயர் மற்றும் சஸ்பென்ஷன்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், சைக்கிளின் உறுதி தன்மைக்காக அலாய் ஃப்ரேம், ஷிமனோ அல்டஸ் இஎஃப்500 மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இந்த சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

பிட்வின் ராக் ரைடர் 520 எம்டிபி

டைப்: மலையேற்றத்திற்கான பைக்

விலை: ரூ. 23,999

பிட்வின் ராக் ரைடர் 520 எம்டிபி இதுவும் ஓர் மலையேற்றத்திற்கு பயன்படக்கூடிய சைக்கிள். பிட்வின் பிராண்டின் மிகவும் பிரபலமான சைக்கிளாகும். இதனைப் பலர் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற பயன்பாட்டின் காரணமாகவே இந்த வாகனத்தை பிட்வின் இவோ அலாய் ஃப்ரேமைக் கொண்டு நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

இதுமட்டுமின்றி, ட்யூவல் ஹயஸ் எம்எக்ஸ்5 டிஸ்க் பிரேக்குகள் அதிக பாதுகாப்பு பிரேக் வசதிக்காக பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, அட்ஜஸ்டபிள் சன்டூர் எக்ஸ்சிடி ஃபோர்க் ஆஃப்-ரோடு பயணத்திற்காக பிரத்யேகமாக பொருத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் மற்றும் 27.5 இன்ச் அளவுள்ள வீல் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

ஃபயர்ஃபாக்ஸ் ரோட் ரன்னர் ப்ரோ டி ப்ளஸ்

டைப்: சிட்டி ஹைபிரிட் பைக்

விலை: 29,500

ஃபயர்ஃபாக்ஸ் ரோட் ரன்னர் ப்ரோ டி ப்ளஸ் ஓர் இளைஞர்களுக்கான ஹைபிரிட் சைக்கிள் ஆகும். நகர மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சைக்கிள் இது. மண் பாதை மற்றும் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலைகளில்கூட இது மிக சுலபமாக பயணிக்கும். இதில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்கா 40 மிமீ அளவுள்ள சஸ்பென்ஷன் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

இதுதவிர, 4 விதமான வித்தியாசான அளவுள்ள ஃப்ரேம்கள் தேர்வில் இச்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி அதிக மிருதுவான இருக்கை, அதிக க்ரிப் திறன் கொண்ட ஹேண்டில் பார் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனை உடல் ஃபிட்னஸுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

மோண்ட்ரா டிரான்ஸ் 700எக்ஸ்35சி

டைப்: சிட்டி ஹைபிரிட் பைக்

விலை: ரூ. 18,350

மோண்ட்ரா டிரான்ஸ் 700எக்ஸ்35சி ஓர் பட்ஜெட் ரக ஹைபிரிட் சைக்கிள் ஆகும். சைக்கிளை முதல் முறையாக பழகும் நபருக்கு ஏற்ற வசதிகளை இந்த வாகனம் கொண்டிருக்கின்றது. இவர்களுக்காகவே ஷிமனோ அல்டஸ், எஸ்டி-இஎஃப்500, (3X7-ஸ்பீடு) 27 ஸ்பீடு ஷிஃப்டர் போன்ற பல்வேறு அம்சங்களை இந்த சைக்கிள் பெற்றிருக்கின்றது.

நீங்க பிரீமியம் சைக்கிள் பிரியரா?... இதோ இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 4 பிரீமியம் சைக்கிள்களின் லிஸ்ட்...

இதுமட்டுமின்றி, இலக ரக எடைக் கொண்ட அலுமினியம் அலாய் ஃப்ரேம், 700சி அலாய் ரிம் மற்றும் முன்பக்கத்தில் 50மிமீ அளவுள்ள சஸ்பென்ஷன் போன்ற சிறப்பு கூறுகளையும் இந்த வாகனம் பெற்றிருக்கின்றது. ஆனால், இதில் டிஸ்க் பிரேக் இடம்பெறவில்லை. இதற்கு பதிலாக வி-வடிவத்திலான மெக்கானிக்கல் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், இந்த சைக்கிளையும் அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்த முடியும்.

Most Read Articles

English summary
Top 4 Premium Cycles In India Under Rs. 30,000. Read In Tamil.
Story first published: Saturday, February 13, 2021, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X