ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை ஹோண்டா நிறுவனம் அசைக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 350 சிசி பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ராயல் என்பீல்டு நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது. 5ல் 4 இடங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வாரி சுருட்டியுள்ளது. எஞ்சிய ஒரு இடம் ஹோண்டா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 38,827 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 13,751 ஆக குறைந்துள்ளது. இது 64.58 சதவீத வீழ்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை கடந்த செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,184 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த பைக் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே 2020 செப்டம்பர் உடன் விற்பனை எண்ணிக்கையை நம்மால் ஒப்பிட இயலாது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ராயல் என்பீல்டு அல்லாத ஒரே ஒரு பைக் இதுதான். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,995 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த பைக் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

எனவே ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை போல், இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ராயல் என்பீல்டு புல்லட் 350 பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,883 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பரில் வெறும் 2,107 ஆக குறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இது 76.28 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ராயல் என்பீல்டு எலெக்ட்ரா 350 பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,732 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 672 ஆக குறைந்துள்ளது. இது 88.28 சதவீத வீழ்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் வருகையால்தான், புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 ஆகிய பைக்குகளின் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் 'ஸ்மூத்' ஆன இன்ஜின் வழங்கப்பட்டிருப்பதுடன், ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

எனவே வாடிக்கையாளர்கள் பலர் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 ஆகிய பைக்குகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் 350 சிசி செக்மெண்ட், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டை என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்த கோட்டை அசைத்து பார்க்கும் ஹோண்டா நிறுவனத்தின் முயற்சிக்கு சற்றே பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் ஹைனெஸ் சிபி350 பைக் இந்த பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுக்கு மாற்றாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கருதப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை அசைக்க தொடங்கிய ஹோண்டா... அதிருப்தியாளர்கள் கொண்டாட்டம்!

இந்த 2 பைக்குகளையும் விரும்பாதவர்கள், ஹைனெஸ் சிபி350 பைக்கை தேர்வு செய்து வருகின்றனர். ஹைனெஸ் சிபி350 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது பிரபலமடைந்து வருகிறது. ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 அளவிற்கு இந்த பைக் விற்பனையாகுமா? என்பதெல்லாம் பெரிய சந்தேகம்தான். ஏனெனில் இந்த இரண்டு பைக்குகளுக்கும் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 22, 2021, 23:57 [IST]
English summary
Top 5 350cc motorcycles in september 2021 royal enfield classic leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+