200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

புதிய புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகங்களினால் நடு-இடப்பெயர்வு எனப்படும் 200சிசி- 400சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வருகிறது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

இருப்பினும் இடையில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸினால் மற்ற மோட்டார்சைக்கிளை போல் இந்த பிரிவு பைக்குகளின் விற்பனையும் குறைந்துள்ளது. இது கடந்த மாதத்திலும் தொடர்ந்துள்ளதை கீழேயுள்ள அட்டவணையை பார்க்கும்போது உங்களுக்கே தெரியவரும்.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!
Rank Model May-21 Apr-21 Growth (%)
1 RE Classic 350 9,239 23,298 -60.34
2 RE Bullet 350 4,557 9,908 -54.01
3 RE Meteor 350 3,375 7,844 -56.97
4 RE Electra 350 2,112 3,631 -41.83
5 Bajaj Pulsar 200 1,026 3,914 -73.79
6 RE Himlayalan 463 2,815 -83.55
7 Honda H'ness CB350 428 2,969 -85.58
8 Bajaj Avenger 220 176 650 -72.92
9 KTM 250 168 1,089 -84.57
10 Yamaha FZ25 140 182 -23.08

ஏனெனில் இந்த அட்டவணையில் உள்ள மோட்டார்சைக்கிள்கள் அனைத்தின் விற்பனையும் இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் பெரிய அளவில் குறைந்துள்ளது. 200சிசி-யில் இருந்து 400சிசி வரையில் கடந்த 2021 மே மாதத்தில் மொத்தம் 22,044 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

ஆனால் முந்தைய 2021 ஏப்ரலில் 58,878 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இத்தகைய மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் சுமார் 62.56 சதவீதம் குறைந்துள்ளது. இத்தகைய பிரிவில் எப்போதுமே ராயல் என்பீல்டின் ஆளுமை தான் அதிகமாக இருக்கும். அது கடந்த மே மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

எந்த அளவிற்கு என்றால், இந்த லிஸ்ட்டில் முதல் நான்கு இடங்களை ராயல் என்பீல்டு பைக்குகளே ஆக்கிரமித்துள்ளன. ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனையில் 10வது இடத்தை பிடித்திருந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை தனதாக்கியுள்ளது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரதான விற்பனை மாடலாக விளங்கும் கிளாசிக் 350 கடந்த மாதத்தில் 9,239 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஏப்ரலில் 23,298 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

இதன்படி பார்க்கும்போது கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை சுமார் 60.34 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் புல்லட் 350, 4,557 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் ஏப்ரலில் 9,908 புல்லட் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

மூன்றாவது இடத்தை ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 பிடித்துள்ளது. மீட்டியோரின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை 3,375 ஆகும். கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காத ராயல் என்பீல்டு பைக்கான எலக்ட்ரா 350 நான்காவது இடத்தில் உள்ளது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் ராயல் என்பீல்டு எலக்ட்ரா 350 பைக்கின் விற்பனையில் மிக பெரியளவில் மாற்றமில்லை. பெரும்பாலும் இந்த நான்காவது இடத்தை இளைஞர்களின் ஃபேவரட்டாக உள்ள பஜாஜ் பல்சர் 220 பைக் தான் பிடிக்கும், ஆனால் இந்த பல்சர் பைக் கடந்த மாத விற்பனையில் ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

200சிசி- 500சிசியில் அதிக பேர் தேர்வு செய்யும் பைக் இதுதான்!! பஜாஜ் டோமினாரின் விற்பனை குறைந்தது!

இதனை காட்டிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயனின் விற்பனை ஒரேடியாக 83.55 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் ஏழாவது இடத்தில் உள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனையும் பெரிய அளவில் சரிந்துள்ளது. புதிய தலைமுறை ஹிமாலயன் நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 24, 2021, 17:03 [IST]
English summary
Top 10 Motorcycles 200cc To 500cc May 2021 – Classic, Pulsar, Meteor, CB350.
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+